இது சீன் தீபாவளி… வசூலில் ஹாட்ரிக் அடிக்கும் சூர்யா – வெளியானது அப்டேட்
Actor Suriyas Scene movie box office collection update | நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் சீன். இந்தப் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து இதுவரை மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அந்தபடி கடந்த 2026-ம் ஆண்டு மே மாதம் கருப்பு படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தினை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலில் சாதனைப் படைத்தது. அதுவும் சூர்யாவின் நடிப்பில் அதற்கு முன்பு வசூலித்தது விட அதிக அளவில் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியானது. அந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி இருந்தார். அந்தப் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து இரண்டு படங்கள் வெற்றியைப் பெற்ற நிலையில் மூன்றாவதாக வெளியான சீன் படமும் தற்போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது சூர்யாவின் சினிமா கெரியரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




சூர்யாவின் சீன் படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
அதன்படி இந்த சீன் படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை நஸ்ரியா நசீம் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேன் வில்லனாக நடித்து உள்ளார். இந்தப் படம் கடந்த 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்களில் மொத்தம் ரூபாய் 145 கோடிகள் உலக அளவில் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் சோதனை… முதல்வர் பதிலளிக்க கோரிக்கை!
சீன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A Blockbuster #SCENE Worldwide! 145 Cr+ At the Box-office 🧨
Running Successfully in Cinemas Now!
@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @RakenduMouliv @Dravid_Selvam @rajpriyan007 @kabilanchelliah @rajsekarpandian @2D_ENTPVTLTD @GokulamMovies @SakthiFilmFctry @NVRCinema @MMovies4u @vkfilmsrelease @pharsfilm @SonyMusicSouth @SceneTheMovie @Linqmarqet @ursvamsishekar @pro_sabari @prosathish
— Zhagaram Studios (@ZhagaramOffl) November 9, 2026
Also Read… விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்