தியேட்டரில் 25 நாட்களைக் கடந்தது ஜெயிலர் 2 படம்… கொண்டாட்டத்தில் படக்குழு
Jailer 2 Movie Team Celebration Post | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர் 2. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 நாட்களைக் கடந்துள்ள நிலையில் படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக நாயகனாக ஹிட் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஹிட் படங்களில் நடிக்கிறார் என்பதைவிட அவர் நடிக்கும் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்பது திரையுலகினருக்கு மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் நன்கு தெரிந்த ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து எத்தனை இளம் தலைமுறையினர் நடித்து இருந்தாலும் அவர்களுக்கு தற்போதும் டஃப் கொடுக்கும் விதமாக பிசியாக நடித்து வருகிறார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர் 2 (Jailer 2). பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல இந்த இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். முந்தைய பாகத்தைவிட இந்த பாகத்தில் அதிக அளவில் பிரபலங்கள் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தியேட்டரில் 25 நாட்களைக் கடந்தது ஜெயிலர் 2 படம்:
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 நாட்களைக் கடந்துள்ளது. இதனைத் கொண்டாடும் விதமாக படக்குழு தற்போது தங்களது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்த ஜெயிலர் 2 படம் வருகின்ற 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… Kamal Haasan Birthday: கமல்ஹாசனின் பர்த்டே… அவரின் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?
ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Thalaivan Nerandharam ⭐️
25 Unbeatable Days of #Jailer2 💥#Jailer2 Industry Mega Blockbuster
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss
— Sun Pictures (@sunpictures) November 8, 2026
Also Read… ராஜா ராணி படத்தில் நாங்கள் தான் நடித்து இருக்க வேண்டியது – நடிகை ரெஜினா கசாண்ட்ரா



