குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி தேதி.. மிஸ் பண்ணிடாதீங்க!
TNPSC Group 4 Exam Last Date To Apply | குரூப் 4 தேர்வு எழுத நவம்பர் 05, 2026 கடைசி தேதியாக இருந்த நிலையில் நவம்பர் 08, 2026 ஆக நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட கடைசி தேதி இன்றுடன் நிறைவடைகிறது.
சென்னை, நவம்பர் 08 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC – Tamil Nadu Public Service Commission) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு (Group 4 Exam) விண்ணப்பிக்க இன்று (நவம்பர் 08, 2026) கடைசி தேதியாகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய நவம்பர் 05, 2026 அன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் நவம்பர் 08, 2026 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசி தேதியும் இன்றுடன் முடிவடைகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பல்வேறு குழுக்களாக தேர்வுகளை நடத்தும் TNPSC
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என பல்வேறு குழுக்களுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு தகுதி உள்ளது. அந்த வகையில், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு வேலை பெற உதவியாக இருக்கும் தேர்வு தான் குரூப் 4. தற்போது அந்த குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு தான் இது.
இதையும் படிங்க : மதுரையில் நவம்பர் 13 முதல் புத்தகத் திருவிழா.. 200க்கும் மேற்பட்ட அரங்குகள்.. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
நவம்பர் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட காலக்கெடு
இந்த குரூப் 4 தேர்வு எழுத தயாராக உள்ளவர்கள் நவம்பர் 05, 2026 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, கடைசி தேதி நவம்பர் 08 ஆம் தேதியாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த கால அவகாசமும் இன்றுடன் நிறைவடைகிறது. அதாவது, இன்று இரவு 11.59 மணி வரை ஆன்லைன் மூலம் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.
விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்
தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மட்டுமல்ல, ஏற்கனவே சமர்ப்பித்த விண்ணப்பத்தில் மாற்றம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், நவம்பர் 11, 2026-க்குள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். இதற்கு முன்னதாக கடைசி தேதி நவம்பர் 09, 2026 ஆக இருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொடூர கொலை – ஏற்காட்டில் வீசப்பட்ட உடல் பாகங்கள் – பகீர் தகவல்கள்
ஜனவரி 10 ஆம் தேதி தேர்வு
இன்று இரவு 12 மணிக்குள் விண்ணப்பம் செய்யும் நபர்களுக்கு 2027, ஜனவரி 10 ஆம் தேதி தேர்வு நடைபெறும். அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பப்பட்டுள்ளது. எனவே, குரூப் 4 தேர்வு எழுத திட்டமிட்டுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.