AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!

Tamil Nadu Weather Update Today | தமிழகத்தில் தென்கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாக பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!
Weather
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Nov 2026 07:06 AM IST

சென்னை, நவம்பர் 08 : இந்தியாவின் (India) பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் (Tamil Nadu) பருவமழை தொடங்கியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று (நவம்பர் 08, 2026) 13 மாவட்டங்களின் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) கூறியுள்ளது. இந்த நிலையில், இன்றைய மழை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது

வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஒருசில நாட்கள் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்றதே மீனவர்கள் மரணத்துக்கு காரணம் – கடலோர காவல் படை அறிக்கையால் சர்ச்சை

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது – வானிலை மையம்

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Tamil Nadu Weather forecast: தீபாவளியன்று இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?

4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

இதேபோல சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

இதன் தொடர்ச்சியாக நவம்பர் 13, 2026 அன்று வங்க்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், அதன் பிறகு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us