AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருத்தணி முருகன் கோயிலில் தரிசன கட்டுப்பாடு.. முக்கிய அறிவிப்பு!

Tiruttani Murugan Temple Darshan | திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோயிலில் தரிசன கட்டுப்பாடு.. முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Nov 2026 07:54 AM IST

திருத்தணி, நவம்பர் 08 : திருத்தணி முருகன் கோயிலில் (Tiruttani Murugan Temple) தரிசனத்துக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் சஷ்டி விழா தொடங்கப்பட உள்ள நிலையில், இந்த முக்கிய அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருத்தணி முருகன் கோயிலில் சஷ்டி விழா

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் நவம்பர் 10, 2026 முதல் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக நவம்பர் 10, 2026 முதல் நவம்பர் 15, 2026 வரை என தொடர்ந்து 5 நாட்கள் மூலவர் முருகப்பெருமாள் நாள்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். அதாவது புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்க கவசம், திருவாபரணம், வெள்ளிக் கவசம், சந்தன காப்பு உள்ளிட்ட அலங்காரங்கள் நடைபெற உள்ளன.

இதையும் படிங்க : பெரியார் அறிவுலக போலி நூல்கள் விவகாரம் – 8 கேள்விகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்

தரிசனத்துக்கு நேர கட்டுப்பாடு விதிப்பு

இதற்கிடையே கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவதன் காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  அதன்படி, நவம்பர் 10, 2026 அன்று மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும், நவம்பர் 11, 2206 அன்று முதல் நவம்பர் 14, 2026 அன்று வரை தினமும் காலை 8 மணி முதல் காலை 10.30 மணி வரையும், நவம்பர் 15, 2026 அன்று மாலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்றதே மீனவர்கள் மரணத்துக்கு காரணம் – கடலோர காவல் படை அறிக்கையால் சர்ச்சை

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த நேர பட்டியலில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த நேரங்களில் பொதுமக்கள் திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே நவம்பர் 10, 2026 முதல் நவம்பர் 15, 2026 வரை என மொத்தம் ஐந்து நாட்கள் திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்ல உள்ள பொதுமக்கள் இந்த நேர அட்டவணையை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பது அவசியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us