AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மூதாட்டி.. தள்ளு வண்டியில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட உடல்!

Elderly Woman's Body Transported by Pushcart | தேனியில் சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை சிலர் தள்ளு வண்டியில் வைத்து எடுத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை பலரும் வருத்தத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மூதாட்டி.. தள்ளு வண்டியில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட உடல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Nov 2026 13:31 PM IST

தேனி, நவம்பர் 08 : தேனியில் (Theni) உயிரிழந்த மூதாட்டியின் உடலை தகனம் செய்ய, ஆம்புலன்ஸ் கிடைக்காததன் காரணமாக உடல் தள்ளு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்த நிலையில், ஆதரவு இல்லாமல் வசித்து வந்த மூதாட்டி உயிரிழந்த நிலையில் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், ஆம்புலன்ஸ் இல்லாததால் மூதாட்டியின் உடல் தள்ளு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மூதாட்டி

தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவருக்கு வயது 64. இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், ஆதரவின்றி மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று (நவம்பர் 07, 2026) அதே ஊரில் உள்ள தனக்கு தெரிந்த சிலரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென தெருவில் மயங்கி விழுந்துள்ளார்.

இதையும் படிங்க : கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் முறைக்கேடு – ஆராய்ச்சி மாணவர்கள் குற்றச்சாட்டு

மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய முயன்ற மக்கள்

மூதாட்டி சாலையில் மயங்கி விழுந்து நிலையில், அந்த பகுதி மக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பரிசோதனை செய்து மூதாட்டி உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் தான், அவர் ஆதறவற்றவர் என்பதால் அந்த பகுதி மக்கள் அவரது உடலை தகனம் செய்ய முயற்சி செய்துள்ளனர். அதற்காக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்துள்ளனர்.

இதையும் படிங்க : மதுரையில் நவம்பர் 13 முதல் புத்தகத் திருவிழா.. 200க்கும் மேற்பட்ட அரங்குகள்.. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

2 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்ற பொதுமக்கள்

மூதாட்டியின் உடலை தகனம் செய்ய, தேனி மின் மயானத்தில் தகனம் செய்ய ரசீது பெற்றுள்ளனர். ஆனால், உடலை கொண்டுச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வராமல் இருந்துள்ளது. இதனையடுத்து வேறு வழியின்றி அந்த பகுதி மக்கள் சிலர் இணைந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை எரிவாயு தகன மேடைக்கு தள்ளு வண்டியில் வைத்து தள்ளிச் சென்றுள்ளனர். பிறகு அவரது உடல் தகன மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தான், ஆம்புலன்ஸ் வாகனம் கூட இல்லாமல் தள்ளு வண்டியில் வைத்து மூதாட்டியின் உடல் கொண்டுச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவை பலரும் கவலையுடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Follow Us