AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வெளியானது சூர்யாவின் சீன் படத்தின் ஆல்பம்… உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது?

Suriyas Scene Movie Album Out Now | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். இந்தப் படத்தில் இருந்து அதன் பாடல்கள் அனைத்தும் ஆல்பமாக தற்போது படக்குழு வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியானது சூர்யாவின் சீன் படத்தின் ஆல்பம்… உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது?
சீன் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Nov 2026 16:41 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் இதுவரை இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இதே ஆண்டில் மூன்றாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன் (Scene Movie). இயக்குநர் ஜித்து மாதவன் (Director Jithu Madhavan) எழுதி இயக்கிய இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் காமெடி பாணியில் உருவாகி உள்ளது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளர். மலையாள சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களுக்கு இவர்தான் இசையமைத்துள்ளார். அதன்படி இவரது இசையில் வெளியான கும்பலங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், கப்பேலா, கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ், மாலிக், மின்னல் முரளி, பீஷ்ம பர்வம், ரோமான்சம், மஞ்சுமல் பாய்ஸ், ஆவேஷம் என பலப் படங்கள் சூப்பர் டூப் ஹிட் அடித்துள்ளது. இறுதியாக மலையாள சினிமாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற பாலன் தி பாய் என்ற படத்திற்கும் சுஷின் ஷியாம் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியானது நடிகர் சூர்யாவின் சீன் படத்தின் ஆல்பம்:

தொடர்ந்து மலையாள சினிமாவில் இசையமைப்பாளராக உச்சத்தில் இருக்கும் சுஷின் ஷியாம் தற்போது சீன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் மலையாளத்தில் இசையமைத்த பாடல்களையே தமிழக மக்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது சீன் படத்தின் பாடல்களையும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படக்குழு தற்போது சீன் படத்தின் ஆல்பத்தை வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… மலையாள சினிமாவில் டைம்லூப் பாணியில் கலகலப்பாக வெளியான தூமகேது படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

சீன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Appa Kutty: ஏன் இந்த பெண்ணுக்கு… விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் 2வது சிங்கிள் வெளியீடு!

Follow Us