AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தொப்புள் கொடியுடன் இருந்த பெண் குழந்தை.. முதலமைச்சர் விஜய் வீட்டின் அருகே வீசிச்சென்ற பெண்..

Chennai Crime: சென்னை நீலாங்கரையில் முதலமைச்சர் விஜய் வீட்டின் அருகே தொப்புள் கொடியுடன் சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை வீசிச்சென்ற பெண் பிடிபட்ட நிலையில் அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொப்புள் கொடியுடன் இருந்த பெண் குழந்தை.. முதலமைச்சர் விஜய் வீட்டின் அருகே வீசிச்சென்ற பெண்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Nov 2026 17:03 PM IST

நவம்பர் 5, 2026: சென்னை நீலாங்கரையில் முதலமைச்சர் விஜய் வீட்டின் அருகே தொப்புள் கொடியுடன் சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையை வீசிச் சென்ற பெண்ணை அடையாளம் கண்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவின் காரணமாகப் பிறந்த குழந்தை என்பதால் அதனை கைவிட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் வீட்டின் அருகே சாலையோரத்தில் கிடந்த குழந்தை!

சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது பிரதான சாலையில் முதலமைச்சர் விஜய்யின் வீடு அமைந்துள்ளது. இன்று காலை அப்பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையோரத்தில் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கு சென்று பார்த்தபோது, தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க: திருவண்ணாமலை கோயிலில் நந்தி வாகனம் மீது ஏறி கோபுரம் சுத்தம் செய்த விவகாரம்.. ஊழியர் மீது பாய்ந்த நடவடிக்கை..

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீலாங்கரை போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர். பின்னர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி காட்சியில் சிக்கிய பெண்

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் குழந்தையைச் சாலையோரத்தில் விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டிலேயே பிரசவம் – குழந்தையை கைவிட்டதாக தகவல்

விசாரணையில், 34 வயதுடைய அந்தப் பெண், விமான நிலையத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தந்தையின் மகள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய அவர், பின்னர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: சட்டம் அனைவருக்கும் சமம்! முதல்வர் விஜய்- ஜெகன்மோகன் ரெட்டி பேனர் அகற்றம்.. சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

மேலும், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவின் காரணமாகக் கர்ப்பமான அவருக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலேயே பிரசவம் நடந்துள்ளது. இதையடுத்து இரண்டு நாட்களாகக் குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்துள்ளார். இதற்கு பெற்றோர் கண்டனம் தெரிவித்ததால், குழந்தையை அருகிலுள்ள சுடுகாட்டில் விட்டுச் செல்ல முயன்றுள்ளார். அங்கு ஊழியர்கள் இருந்ததால், பின்னர் வீட்டின் அருகே சாலையோரத்தில் குழந்தையை விட்டுச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தையை ஏற்க மறுத்த பெண்.. போலீசார் விசாரணை

தற்போது உளவியல் தொடர்பான ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வரும் அந்தப் பெண்ணின் மனநிலை குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையை மீண்டும் அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தபோது, அவர் குழந்தையை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையிலேயே தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பெண்ணின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us