Sreeleela: ரோஜாவாக ஸ்ரீலீலா… ஓம் படத்திலிருந்து ஸ்ரீலீலாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ!
Sreeleela Om Movie Character: தென்னிந்திய மக்களிடையே இளம் நடிகையாக மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீலீலா. இவரின் நடனம் தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் இவர் தனுஷின் ஓம் படத்தில் நாயகியாக நடித்துள்ள நிலையில், அவரின் கதாபாத்திரம் குறித்த வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. இது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
கன்னட சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்து, தற்போது தென்னிந்திய மொழிகளில் பேக் டூ பேக் திரைப்படங்களில் நடித்துவருபவர்தான் நடிகை ஸ்ரீலீலா (Sreeleela). இவரின் நடனம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். நடிகையாக இவர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் (Parasakthi Movie) மூலம் தமிழில் நுழைந்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு தமிழில் புது புது படங்களில் ஒப்பந்தமாகிவந்தார். அந்த விதத்தில் இவர் தமிழில் இரண்டாவது இணைந்த படம்தான் ஓம் (Om Movie). இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்கியுள்ள நிலையில், தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் எல்லாம் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் உள்ள நிலையில், இப்படம் 2026 நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த விதத்தில் இப்படத்தில் ஸ்ரீலீலாவின் கதாபாத்திர அறிமுகம் குறித்த வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ள நிலையில், இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. பர்த்டே பாய் சாய் அபயங்கர் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?
ஓம் திரைப்படத்தில் ரோஜாவாக நடிகை ஸ்ரீலீலா:
இந்த ஓம் திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா, தனுஷின் காதல் மனைவியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அப்படியே குடும்ப பெண்ணை போலவே, சிறப்பாக தனது வேடத்தில் நடித்துள்ளார். இதுபோல அவர் இதுவரை வேறு எந்த படங்களிலும் நடித்ததில்லை என கூறலாம். இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலா “ரோஜா” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் நிச்சயம் அவருக்கு சிறப்பான வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்கில் முதல் டார்கெட் யார் தெரியுமா? வைரலாகும் புரோமோ வீடியோ!
ஓம் திரைப்படத்திலிருந்து வெளியான ஸ்ரீலீலா கதாபாத்திர அறிமுக வீடியோ:
She arrives to light up a bright smile ❤️
Introducing @sreeleela14 as Roja – Senjudare, third single from #OM drops Tomorrow.
▶️ https://t.co/F1AxwVeAAS
Worldwide release on November 20th 💥
A @Rajkumar_KP Film.
A @SaiAbhyankkar melodious magical.@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 #NaseeruddinShah #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @tatvaman @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 3, 2026
இந்த ஓம் திரைப்படத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் இந்திரன்ஸ் என பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது தமிழகம் மற்றும் ஆந்திரா எல்லை பகுதிகளில் நடக்கும் செம்மர கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளானது தொடங்கியுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் தொடர்பான அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.