Dare Devil: அஜித்தின் டேர் டெவில் படத்தில் உன்னி முகுந்தன் – ஸ்ரீலீலா வேடம் இதுதான் – சுரேஷ் சந்திரா விளக்கம்!
Unni Mukundhan And Sreeleela Role In Dare Devil: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார். இவரின் 64வது திரைப்படமான டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் உன்னி முகுந்தன் மற்றும் ஸ்ரீலீலாவின் வேடம் குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஸ்டார் நாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை தமிழில் கிட்டத்தட்ட 63 திரைப்படங்கள் வெளியாகிவிட்டது. இறுதியாக 2025ம் ஆண்டில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்த நிலையில், ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அஜித் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணி படமானது ஆரம்பத்தில் AK64 என அழைக்கப்பட்டுவந்த நிலையில், அதன் பிறகு தற்போது டேர் டெவில் (Dare Devil Movie) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாலினி அஜித் குமார் (Shalini Ajithkumar) தயாரிப்பாளராக தயாரிக்கும் நிலையில், அனிருத் (Anirudh) இசையமைக்கிறாராம்.
இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் நேற்று (02/11/2026) சிறப்பாக தொடங்கியிருந்த நிலையில், பல்வேறு நடிகர்கள் மற்றும் நட்சத்திர இயக்குநர்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சுரேஷ் சந்திரா, ஸ்ரீலீலா மற்றும் உன்னிமுகுந்தன் கதாபாத்திரம் குறித்து அவர் தெரிவித்துள்ளளார்.




இதையும் படிங்க: என்னுடன் 3 படத்தை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.. நஸ்ரியா குறித்து பேசிய சூர்யா!
டேர் டெவில் படத்தில் உன்னி முகுந்தன் மற்றும் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் பற்றி சுரேஷ் சந்திரா:
அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில், “இந்த படத்தில் நடிக்க ஸ்ரீலீலா, எங்களுக்காக ஒரு வருடம் காத்திருந்தது அவருடைய ஒரு சிறந்த செயல். இப்படத்தில் கதாபாத்திரத்திற்கு மிகுந்த நடனத் திறமையும் துடிப்பும் உள்ள ஒருவர் தேவைப்பட்டார், அதனால் ஸ்ரீலீலா இதில் இணைந்தார். இதில் அவர் அஜித்தின் மகளாக நடிக்க மாட்டார், மேலும் படத்தில் அவர் அஜித்துடன் ஜோடி சேர்வாரா? என்பது கூடிய விரைவில் தெரியும்” என கூறினார்.
இதையும் படிங்க: விஷுவல் ட்ரீட்… மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து வெளியான மஹாசக்தி ட்ரான்ஸ் வீடியோ!
மேலும் உன்னி முகுந்தன் பற்றி பேசிய அவர், “இப்படத்தில் உன்னி முகுந்தனுடைய கதாபாத்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்த வேடத்திற்கு பல நடிகர்களின் பெயர் விவாதிக்கப்பட்டது, ஆனால் உன்னி முகுந்தன் தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதில் அஜித் உறுதியாக இருந்தார், ஏனெனில் அவருக்கு பான் இந்திய பிரபலத்தை கொண்டவர் என அஜித் நினைத்தார்” என அதில் தெரிவித்துள்ளார்.
அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் பூஜை குறித்து சுரேஷ் சந்திரா பகிர்ந்த எக்ஸ் பதிவு:
The Pooja ceremony of #Daredevil was held today, marking the beginning of an exciting new chapter. A special moment celebrating the occasion along with the entire crew of #Daredevil.
#AjithKumar #Daredevil #ShaliniAjithKumar
@Braveheartsprod @Adhikravi @anirudhofficial
@Iamunnimukundan
@sreeleela14
@rparthiepan @suneeltollywood
@SureshChandraa @AbinandhanR @editorvijay @supremesundar #Subbhunaarayan @itsanuvardhan @kayoas13 @valentino_suren @Donechannel1 @AbdulNassarOffl @AMBANINSK @riseandroar_inc— Suresh Chandra (@SureshChandraa) November 2, 2026
நடிகர் அஜித் குமார் தென்னிந்திய சினிமாவில் ஒருவராக இருக்கும் நிலையில், கார் ரேஸ் போட்டியலிலும் இந்தியாவிற்கு சார்பாக பங்குபெற்றுவருகிறார். இவர் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டேர் டெவில் படத்தின் ஷூட்டிங்கில் இணைகிறார். இப்படம் 2027ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.