Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Ajith Kumar

Ajith Kumar

கோலிவுட்டில் மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். தல என்றும் AK என்றும் அழைக்கப்படும் அஜித் தனது கேமரா அனுபவத்தை விளம்பரம் மூலமே தொடங்கினார். சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்த அஜித் பைக் மீதுள்ள ஆசையால் மெக்கானிக்காவும் இருந்தார். பின்னர் 1992 இல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தொடக்ககால தமிழ் படங்கள் அஜித்துக்கு அறிமுகத்தை கொடுத்ததே தவிர பெரிய ரீச்சை கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் வெளியான ஆசை படம் அஜித்துக்கு தனி இடத்தை பிடித்துக்கொடுத்தது. அதன் பின்னர் சாக்லெட் பாயாகவும், மாஸ் ஹீரோவாகவும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் அஜித். இவர் தன்னுடைய 25 வது படமான அமர்க்களத்தில் நடித்தபோது சக நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போதும் பைக் ரேஸ், கார் ரேஸ், உலக சுற்றுலா, போட்டோகிராபி, துப்பாக்கிச் சுடுதல் என பன்முக திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகராக இருக்கிறார் அஜித்.

Read More

குட் பேட் அக்லி படக்குழு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Good Bad Ugly Movie: நடிகர் அஜித் குமார் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் இளையராஜாவின் பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக படக்குழு மீது இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அஜித்தின் எளிமை மற்றும் பணிவைப் பார்த்து வியந்தேன் – அனுபமா

Actor Ajith Kumar: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரை சமீபத்தில் பிரபல பத்திரிகையாளரான அனுபமா சோப்ரா பேட்டி எடுத்து இருந்தார். அது தொடர்பாக அனுபமா பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Lokesh Kanagaraj: அஜித் குமாருக்கு கதை சொன்ன லோகேஷ் கனகராஜ்? படம் எப்போ வருது தெரியுமா?

Lokesh Kanagaraj And Ajith Alliance: தமிழ் சினிமாவில் இயக்குநராக தனக்கென ரசிகர்களை தக்கவைத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இவர் அஜித் குமாருடன் புதிய படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

தனது ரேஸ் காருடன் அஜித் குமார் கொடுத்த மாஸான போஸ்… இணையத்தில் வைரலாகும் போட்டோ

Actor Ajith Kumar New Photo: கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் தனது நடிப்பு மற்றும் ரேஸிங்கில் தொடர்ந்து கவனம் செலுத்து வருகிறார். இந்த நிலையில் இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஜித் குமாரின் AK64 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் ஓவர்.. ஷூட்டிங்கில் இனி தாமதமில்லை- ஆதிக் ரவிச்சந்திரன்!

AK64 Movie Shooting Update: தமிழ் சினிமாவில் பேமஸ் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர்தான் ஆதிக் ரவிச்சந்திரன். இவர்தான் அஜித் குமாரின் AK64 படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர், செய்தியாளர்கள் சந்திப்பில் AK64 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருதை வென்றார் நடிகர் அஜித்குமார்

Gentleman Driver of the Year 2025: சினிமாவில் தொடர்ந்து நடித்துவரும் நடிகர் அஜித் குமார் அவரது கார் ரேஜிங்கையும் தொடர்ந்து செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அஜித் குமாருக்கு வெனிசில் உயரிய விருது ஒன்றை மோட்டார் ஸ்போர்ட்ஸ்காக வழங்கு அந்த நாடு கௌரவித்துள்ளது.

ஷாலினி அஜித்குமாரின் பர்த்டே ஸ்பெஷல்… அமர்க்களம் பட ரீ ரிலீஸ் குறித்து அறிவித்த தயாரிப்பாளர்!

Amarkkalam Re-release: தமிழ் சினிமாவில் பிரபல ஜோடியாக இருந்துவருபவர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி. இவர்கள் இருவரும் சினிமாவில் ஒன்றாக நடித்த பின், காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அந்த வகையில் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் இவரின் பிறந்தநாளை ஸ்பெஷலாக அமர்க்களம் படம் ரீ-ரிலீஸ் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

Dulquer Salmaan: ‘அஜித் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்’- ஓபனாக பேசிய துல்கர் சல்மான்!

Dulquer Salmaan About Ajith Kumars Racing Passion: தென்னிந்திய சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர்தான் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் இன்று காந்தா படமானது வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் தல அஜித் குமார் குறித்து இவர் மனம் திறந்த பேசியுள்ளார்.

AK 64 படத்தை தயாரிப்பதில் இருந்து விலகிய பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்

Ajith Kumar 64: நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக AK 64 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து பிரபல தயாரிப்பு நிறுவனம் விலகியதாக செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது – நடிகர் அஜித் குறித்து நெகிழ்ந்து பேசிய நடிகர் சூரி

Soori praised Ajith Kumar: தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூரி. இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்து உள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அஜித் குமாரின் ரேஸிங் அணி.. ஸ்பான்சர்ஷிப் பார்ட்னராக இணைந்த ரிலையன்ஸ் நிறுவனம்’!

Ajith Kumar Racing: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் கார் ரேஸராக இருந்து வருபவர் அஜித் குமார். இவரின் அஜித் குமார் கார் ரேஸிங் அணி இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்றுவருகிறது. இந்நிலையில் இந்த அணிக்கு ஸ்பான்சர்ஷிப்பாக ரிலையன்ஸின் கெம்பா எனர்ஜி கூல்டரிங்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

நடிகர் அஜித் குமாரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு தகவல்

Bomb Threat at Ajith Kumar's House : சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் குமாரின் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் மேற்கொண்ட சோதனையில் அது போலி என தெரிய வந்தது.

Meena: அஜித் கூட அந்த படத்தில் நான் தான் நடிச்சிருக்கணும்.. நடிக்காமல் போனதுக்கு காரணம் இதுதான் – மீனா!

Meena About Ajith Kumar: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவந்தவர் மீனா. இவரின் நடிப்பில் பல்வேறு மொழிகளில் படங்ககள் வெளியாகியிருக்கிறது. இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் அஜித் உடன் நடிக்கவேண்டிய படத்தை தவறவிட்ட காரணம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

அஜித் குமார் நடிப்பில் வெளியான வேதாளம் படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

10 Years Of Vedalam Movie: தமிழ் சினிமா ரசிகர்கள் தல என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற வேதாளம் படம் தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Ajith Kumar: என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன்.. எனது பேட்டிகளை தவறாக சித்தரிப்பாதை நிறுத்துங்கள்- அஜித் குமார்!

Ajith Kumar Clarifies Vijay Stance: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் தளபதி விஜய்யை பற்றி தவறாக கூறியதாக வீடியோக்கள் வைரலான நிலையில், அதற்கு அஜித் விளக்கம் கொடுத்துள்ளார்.