AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sivakarthikeyan: ஆர்வம்.. அர்ப்பணிப்பு.. மீள்தன்மை- அஜித்தை புகழ்ந்த சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyans Emotional Post about Ajith Kumar: தமிழ் சினிமாவில் சிறந்த நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார் இவர் தற்போது துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் இருக்கிறார். இந்நிலையில் இவரை சமீபத்தில் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்திருந்த நிலையில், அவரை பற்றி புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sivakarthikeyan: ஆர்வம்.. அர்ப்பணிப்பு.. மீள்தன்மை- அஜித்தை புகழ்ந்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் மற்றும் அஜித் குமார் Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Feb 2026 12:08 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக பராசக்தி (Parasakthi) என்ற படமானது வெளியாகியிருந்தது. இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கத்தில் கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்த படமானது இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுக்கவில்லை. இதில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ராணா, பேசில் ஜோசப் மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். ஆனாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த படத்தை அடுத்ததாக புது படத்தில் சிவகார்திகேயன் ஒப்பந்தமாகிவருகிறார். இவர் அடுத்ததாக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugeshan) மற்றும் வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu) இயக்கத்தில் புது திரைப்படங்களில் இணையவுள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் தற்போது கிராமத்து ஆக்ஷன் கதைகளை தேர்ந்தெடுத்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், துபாயில் (Dubai) நடிகர் அஜித் குமாரை (Ajith Kumar) நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில் அவரை நேரில் சந்தித்த தருணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: துபாயில் அஜித் குமாரை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் வீடியோ!

அஜித் குமார் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு:

இந்த பதிவில் நடிகர் சிவகார்த்திகேயன், “தூய ஆர்வம், அர்ப்பணிப்பு, கமிட்மெண்ட்ஸ் மற்றும் மீள்தன்மை போன்றவற்றை நேரடியாக அனுபவித்தேன். மேலும் அட்ரினலின் வேகத்தையும் உணர்ந்தேன். இது ஓர் ஊக்கமளிக்கும் நபருடன் கழித்த ஒரு ஊக்கமளிக்கும் நாள். எப்போதும் உங்களை பாராட்டுகிறேன், எனது அன்பான அஜித் குமார் சார்” என அதில் அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் அஜித் குமார் ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பதிவின் கீழ் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் புது திரைப்படம் :

பராசக்தி படமானது சிவகார்த்திகேயனுக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த படத்தை அடுத்தாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் புது படத்தில் வர இணைவதாக கூறப்பட்டுவந்தது. இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷனுக்காக சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றுவந்தனர். இந்த படமானது அறிவியல் புனைக்கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறதாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளாராம்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணி படம்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடனடியாக இணையவுள்ளார் என கூறப்பட்டுவந்த நிலையில், மேலும் தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் இவர் புது படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. இந்த படமானது கிராமத்து பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாகவுள்ளதாம். இந்த் புது படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us