AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sivakarthikeyan: துபாயில் அஜித் குமாரை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் வீடியோ!

Sivakarthikeyan Meets Ajith in Dubai: தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் தற்போது துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் இருந்தவரும் நிலையில், இவரை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Sivakarthikeyan: துபாயில் அஜித் குமாரை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் வீடியோ!
அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Feb 2026 16:52 PM IST

தமிழ் சினிமாவில் துணை நடிகராக நுழைந்து, தற்போது பிரபல நடிகராக சினிமாவில் கலக்கிவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் தமிழில் தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக பராசக்தி (Parasakthi) படமானது வெளியான நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியிருந்த நிலையில், ரவிமோகன், ஸ்ரீலீலா, அதர்வா என பல்வேறு பிரபலங்கள் இனைந்து நடித்திருந்தனர். கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியான இப்படம் ரூ 100 கோடிகள் வசூலித்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக வெங்கட் பிரபு (Venkat Prabhu) மற்றும் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugeshan) போன்ற இயக்குநர்களுடன் புது படங்களில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் விரைவில் புது படத்தின் ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று 2026 பிப்ரவரி 7ம் தேதியில், துபாயில் (Dubai) நடிகர் அஜித் குமாரை (Ajith Kumar) நேரில் சந்தித்துள்ளார். துபாயில் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியில் உள்ள நிலையில், அவரை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பராசக்தி முதல் தி ராஜா சாப் வரை… இந்த வீக்கில் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

அஜித் குமாரை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்தது குறித்த வீடியோ பதிவு:

நடிகர் அஜித் குமார் ஏசியன் லீ மான்ஸ் என்ற போட்டிக்காக துபாயில் தனது அணியினருடன் பயிற்சில் ஈடுபட்டுவருகிறார். இவர் இந்தியாவின் சார்பாக இந்த போட்டியில் கலந்துகொள்ள உள்ள நிலையில், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துவருகிறது. மேலும் இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனமே அஜித் குமாரின் அணிக்கு ஸ்பான்ஸர் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘நாளை நாளை பாடல் ட்ரோல் குறித்த கேள்வி?’.. வேடிக்கையை பதிலளித்த மமிதா பைஜூ!

இந்நிலையில் இந்த ரேஸ் பயிற்சியில் அஜித் ஈசியாக இருந்துவரும் நிலையில், அவரை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்க இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படங்கள் :

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இறுதியாக பராசக்தி படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து உடனடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டுவந்தது. ஆனால் சிவகார்த்திகேயன், தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உடனடியாக புது படத்தில் இணையவுள்ளாராம். இந்த படம், மதுரை மாவட்ட திருவிழா என கிராமத்து கதையில் உருவாகவுள்ளதாம். இதன் அறிவிப்பு சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us