Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி பட ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது தெரியுமா?
Parasakthi OTT Release Date : நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த 2026 ஜனவரி 10ம் தேதி முதல் வெளியான திரைப்படம்தான் பராசக்தி. இப்படமானது திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்த நிலையில், இதன் ஓடிடி ரிலீஸ் எப்போது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வந்து, தற்போது வெள்ளித்திரையில் சாதனை படைத்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் வெளியாகிவருகிறது. அமரன் (Amaran) திரைப்படத்தை அடுத்ததாக தொடர்ந்து ஆக்ஷன் கதைக்களத்தை இவர் தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் இவர் நடித்திருந்த படம்தான் பராசக்தி (Parasakthi). இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போராட்டம் குறித்த கதைக்களத்தில் இப்படம் தயாராகியுள்ள நிலையில், கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இப்படம் வெளியான முதல் நாளிலே மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.
இருந்தாலும் இப்படம் வசூல் ரீதியாக மொத்தம் சுமார் ரூ100 கோடிகள் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் இப்படமானது 8 வாரங்களுக்கு பின்னே ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்டுவந்த நிலையில், இதன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: நடிகர் சூர்யா உடன் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு – அபிஷன் ஜீவிந்த்
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்:
இந்த பராசக்தி படத்தில் சிவகார்திகேயனுடன் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா, ராணா, பேசில் ஜோசப் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது ஆக்ஷன், காமெடி, எமோஷனல் மற்றும் காதல் என ஒட்டுமொத்த கலவையாக உருவாகியிருந்தது. மேலும் இப்படத்தின் கதைக்களம் வேமாக சென்றதாகவும் ரசிகர்கள் மத்தியில் புகார்கள் எழுப்பப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஜன நாயகன் பட பிரச்சனை… வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்
அதன்படி இப்படம் 8 வாரங்களுக்கு பின்னே ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் தற்போது ஒரு மாதம் முடிவதற்கு முன்னதாகவே ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பிரீமியர் ஓடிடி ரிலீஸ் வரும் 2026 பிப்ரவரி 7ம் தேதியில், ஜீ5 ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ஓடிடி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடனடி ஓடிடி ரிலீஸ் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பராசக்தி ஓடிடி ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
#Parasakthi to stream from Feb 7 on Z5🍿💥 pic.twitter.com/Sc60QAOECs
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 31, 2026
பராசக்தி படத்தைப் போலவே கமல்ஹாசனின் தக் லைஃப் படமும் 8 வாரங்களுக்கு பின்னே ஓடிடியிலி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த படத்திற்கு திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்புகள் கிடைக்காத காரணத்தினால் வெளியாகி 3 வாரத்தில் ஓடிடியில் வெளியானது. அதுபோல சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் கிட்டத்தட்ட 30 நாட்களுக்குள்ளே ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.