AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

MS Dhoni: தோனிக்கு ஃபேர்வெல்? முன்னாள் வீரர்களை அழைத்த சிஎஸ்கே.. நிகழ்ச்சி எப்போது தெரியுமா?

Chennai Super Kings: சிஎஸ்கே அணியிலிருந்து தற்போது மற்ற அணிகளில் விளையாடி வரும் வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள். அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மேத்யூ ஹேடன் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ ஆகியோரும் சிஎஸ்கே சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளனர்.

MS Dhoni: தோனிக்கு ஃபேர்வெல்? முன்னாள் வீரர்களை அழைத்த சிஎஸ்கே.. நிகழ்ச்சி எப்போது தெரியுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Mar 2026 16:47 PM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) தொடருக்கு முன்னதாக வருகின்ற 2026 மார்ச் 22ம் தேதி சென்னையில் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஒரு தனித்துவமான விஷயம் ஒன்று நடக்கவுள்ளது. இதில், இதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதாவது, மேத்யூ ஹேடன், முத்தையா முரளிதரன், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, முரளி விஜய், சுப்பிரமணியன் பத்ரிநாத், டுவைன் பிரோவோ ஆகியோ ஒன்றாக சந்திக்க இருக்கின்றனர். ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, சிஎஸ்கே ஒரு மாபெரும் ரீ யூனியனை திட்டமிட்டுள்ளது.

ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான விக்கெட் கீப்பர் யார்? டாப் 5 லிஸ்ட் இதோ!

வீரர்கள் டூ பயிற்சியாளர்கள்:

சிஎஸ்கே அணியிலிருந்து தற்போது மற்ற அணிகளில் விளையாடி வரும் வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள். அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மேத்யூ ஹேடன் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ ஆகியோரும் சிஎஸ்கே சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளனர். முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் பலரும் எம்.எஸ்.தோனிக்கு ஐபிஎல் 2026 சீசன் கடைசி சீசனாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர். எனவே, எம்.எஸ்.தோனி தலைமையின் கீழ் விளையாடிய வீரர்களை அழைத்து ஃபேர்வெல் வைக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்:


இந்த பெரிய நிகழ்வுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில், இது ஐபிஎல் தொடரின் தொடக்கத்தை குறிக்கும் ஒரு சம்பிரதாய நிகழ்வு மட்டுமே என்று சிஎஸ்கே சி.இ.ஓ கூறியுள்ளார். இதுகுறித்து சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், “இது சீசனுக்கான ஒரு முன்னோட்ட தொடக்கமும், ரசிகர்களை ஈடுபடுத்தும் ஒரு முயற்சியும் மட்டுமே. இதில் வேறு எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.

ALSO READ: 2008 முதல் 2025 வரை.. ஐபிஎல் பட்டத்தை வென்ற அணிகளின் பட்டியல்!

நிகழ்ச்சி எப்போது..?

எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகின்ற 2026 மார்ச் 22ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் சிஎஸ்கே ரீ யூனியன் நிகழ்வு ஒரு பிரமாண்டமான விழாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

Follow Us