AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அவர் என் இடத்தில் இருந்தால் தான் தெரியும் – தோனியின் கருத்துக்கு கம்பீர் பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தன்னை பற்றி தோனி தெரிவித்த கருத்துக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒரு நாள் அவர் என் இடத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என் குறிப்பிட்டுள்ளார்.

அவர் என் இடத்தில் இருந்தால் தான் தெரியும் – தோனியின் கருத்துக்கு கம்பீர் பதில்
எம்.எஸ்.தோனி - கௌதம் காம்பீர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Mar 2026 21:09 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சமீபத்தில் தன்னை பற்றி தோனி தெரிவித்த கருத்துக்கு வித்தியாசமான முறையில் பதிலளித்துள்ளார்.   டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பை வென்ற பிறகு தோனி மற்றும் கம்பீர் ஆகியோருக்கு இடையே சமூக வலைதளங்களில் நடந்த உரையாடல் ரசிகர்களிடையே வைரலாகியது. 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி கடந்த மார்ச் 8, 2026 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் நேரில் கண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நேரில் கண்டுகளித்தார். இதனையடுத்து இந்திய அணியின் வெற்றியை பாராட்டிய அவர், கௌதம் காம்பீரையும் அவர் பாராட்டினார்.

இதுகுறித்து தோனி தனது இன்ஸ்டாகிராமில் கோச் சார், உங்கள் சிரிப்பு மிக அழகாக இருக்கிறது. சிரிப்புடன் வெற்றி பெற்றது அருமையான சாதனை என்று பாராட்டினார். அதற்கு பதிலளித்த காம்பீர் உங்களை பார்க்கவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. சிரிக்க ஒரு பெரிய காரணம் கிடைத்துள்ளது. என்று தெரிவித்துள்ளார். அவரது பதில் சமூக வலைதளங்களில் வைரலானதுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதையும் படிக்க : IPL 2026: வெளியான தேர்தல் தேதிகள்! ஐபிஎல் 2026ன் 2ம் கட்ட அட்டவணை எப்போது வெளியிடப்படும்? பிசிசிஐ துணைத் தலைவர் பதில்!

தோனி குறித்து கருத்து தெரிவித்த கம்பீர்

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கௌதம் காம்பீர் ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது பேசிய அவர், தோனி உலகக்கோப்பை இறுதி போட்டியை பார்க்க வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் என்னிடம் சிரிக்க சொன்னது நல்ல விஷயம். ஒரு நாள் அவர் என் இடத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்போது தான் அவருக்கு இந்த மெசேஜை அனுப்புவேன். அவர் டக் அவுட் நடக்கும்போது அவர் சிரிப்பதை பார்க்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ்.தோனி சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, சிறந்த கேப்டனும் கூட. அவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு அவர் மென்டராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 44 வயதானாலும் ஐபிஎல் தொடரில் சூப்பர் கிங்க்ஸ் அணியின் சார்பில் களமிறங்கவிருக்கிறார்.

இதையும் படிக்க : IPL 2026: கவனம் ஈர்க்கும் இளம் வீரர்கள்.. ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே அணியின் பலம் என்ன?

மற்றொருபுரம் கவுதம் காம்பீர் வருகிற 2027 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரது வழிகாட்டுதலில் இந்திய அணி ஏற்கனவே 2 சர்வதேச ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us