Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
MS Dhoni

MS Dhoni

கேப்டன் கூல் என்ற பெயரில் உலகப்புகழ் பெற்ற எம்.எஸ்.தோனி, உலகம் முழுவதும் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன். இவரின் தலைமையின்கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. உலக கிரிக்கெட்டின் சிறந்த பினிஷர்களில் ஒருவராக தோனி கருதப்படுகிறார். எம்.எஸ்.தோனி கடந்த 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி பீகாரில் உள்ள ராஞ்சியில் பிறந்தார். தோனியின் தந்தையின் பெயர் பான் சிங் மற்றும் தாயின் பெயர் தேவகி ஆகும். உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள லாம்கடா தொகுதியில்தான் தோனியின் பூர்வீக கிராமம் உள்ளது. தோனிக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் அதிகம். பள்ளி பருவத்தில் இருந்தே தோனி பேட்மிண்டன், கால்பந்து, கிரிக்கெட் என பல விளையாட்டுகளில் பங்கேற்று சிறந்து விளங்கினார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனை கண்டுபிடிக்க முடியாமல் திணறி கொண்டிருந்தபோது, 2004ம் ஆண்டு தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி எம்.எஸ்.தோனி தனது பள்ளி தோழியான சாக்ஷி சிங் ராவத்தை மணந்தார். இவர்களுக்கு தற்போது ஜீவா என்ற மகளும் உள்ளார்

Read More

Team India T20 World cup Victory: எம்.எஸ்.தோனி முதல் ரோஹித் சர்மா வரை.. 2 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற கதை!

How Team India won Two T20 World Cup: 2007 முதல் 2024 வரை இந்திய அணி மொத்தம் 52 போட்டிகளில் விளையாடி, 36 போட்டிகளில் வெற்றி பெற்று 15 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், 2007ம் ஆண்டும், 2024ம் ஆண்டும் இந்திய அணி எப்படி டி20 உலகக் கோப்பையை வென்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

சிங்கம் இறங்குனா… ஐபிஎல் போட்டிகளுக்காக தீவிர வலைபயிற்சியில் தோனி – வைரல் வீடியோ

MS Dhoni Begins Training : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளுக்காக தீவிர வலைபயிற்சியில் இறங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே அணி, ஒவ்வொருமுறையும் அவர் பேட் பிடிக்கும்போது ரசிகர்களுக்கு விருந்து தான் என குறிப்பிட்டுள்ளது.

On This Day 2014: 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்.. டெஸ்டில் ஓய்வை அறிவித்த எம்.எஸ்.தோனி! இந்திய ரசிகர்கள் ஷாக்!

MS Dhoni Test Retirement: மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 60 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கினார். இதில், இந்திய அணி 27 போட்டிகளில் வெற்றி பெற்றது. எம்.எஸ்.தோனியின் தலைமையில் இந்திய அணி டிசம்பர் 2009 இல் முதலிடம் பிடித்து, தொடர்ந்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் முதலிடத்தில் இருந்தது.

CSK Full Squad 2026: அனுபவம் முதல் இளம் படை வரை.. ஐபிஎல் 2026ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அணி விவரம்!

Chennai Super Kings Full Squad: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ. 18 கோடி கொடுத்து சஞ்சு சாம்சனை வர்த்தகம் மூலம் தங்கள் அணியில் சேர்த்தது. இந்தநிலையில், ஐபிஎல் 2026 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.

ராஞ்சியில் நடந்த ரீயூனியன்: “தோனி – கோலி கார் ரைடு”… கொண்டாட்டத்தில் அதிரும் இணையம்!!..

இந்த ஒருநாள் போட்டிக்கு முன், இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அதேபோல், துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மண்ணீரல் காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்கவில்லை. இதனால், கே.எல்.ராகுல் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார்.

IPL 2026: டிசம்பரில் மினி ஏலம்.. சிஎஸ்கே அணி இந்த 4 வீரர்களை விடுக்கிறதா..?

Chennai Super Kings: ஐபிஎல் 19வது பதிப்பு அடுத்த ஆண்டு 2026 மார்ச் மாதம் நடைபெற உள்ளது. ஐபிஎல் ஏலம் 2025 டிசம்பர் மாத நடுப்பகுதியில் (இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம்) நடைபெறும். இது இந்தியாவிற்கு வெளியே, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கு…. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி

Dhoni defamation case : கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேடு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஐபிஎல் சூதாட்டம்… தோனிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு

MS Dhoni : ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக முன்னாள் காவல் அதிகாரி மீது ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

MS Dhoni: புது ஸ்டேடியத்தில் பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய தோனி.. ரசிகர்கள் செய்த ஆரவாரம்!

Madurai New International Cricket Stadium: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து வேலம்மாள் கல்வி அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியம், சுமார் ரூபாய் 325 கோடி செலவில் கட்டப்பட்ட ஒரு அதிநவீன வசதி ஆகும். தற்போது, இந்த ஸ்டேடியத்தில் 7,200 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இதை 20,000 இருக்கைகளாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

MS Dhoni Madurai Visit: புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழா.. மதுரை மகனாக வரும் எம்.எஸ்.தோனி..!

MS Dhoni Inaugurate Cricket Stadium in Madurai: மகேந்திர சிங் தோனி மதியம் 1.25 மணிக்கு வேலம்மாள் மருத்துவ கல்லூரிக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 2 மணி முதல் 4 மணிக்குள் கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்பட்டு, தோனி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rohit Sharma: விருது விழாவில் தோனியை போல் மிமிக்ரி.. குலுங்கி குலுங்கி சிரித்த ரோஹித் சர்மா.. ட்ரெண்ட் அடிக்கும் வீடியோ!

Rohit Sharma Enjoying MS Dhoni's Mimicry: CEAT விருது நிகழ்ச்சிக்கு ரோஹித் சர்மா வந்தார். இந்த முறை ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் சில சிறப்பு விஷயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தோனியின் குரல் அவரது காதுகளில் வந்தவுடன், ரோஹித் சர்மா சிரிக்கத் தொடங்கினார்.

Suryakumar Yadav: என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிஸ் செய்தது இதைதான்.. சூர்யகுமார் யாதவ் வருத்தம்..!

Indian Cricket Team: உலகின் மிகவும் திறமையான டி20 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக சூர்யகுமார் யாதவ் கருதப்படுகிறார். ஐபிஎல்லை பல முறை வென்றது முதல் கேப்டனாக ஆசிய கோப்பையை வென்றது வரை, சூர்யகுமார் யாதவ் ஒரு கிரிக்கெட் வீரராக தனது வாழ்க்கையில் நிறைய வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

தோனியுடன் நட்பு.. இர்ஃபான் பதானின் மாறுபட்ட பேச்சால் குழப்பம்!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், முன்னாள் கேப்டன் தோனி குறித்து வெளியிட்ட முரண்பட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு வீடியோவில் தோனி தன்னை அணியில் இருந்து நீக்கினார் எனக் கூறிய பதான், வேறு ஒரு வீடியோவில் தோனியுடனான நட்பைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

MS Dhoni: தோனிக்கு கோபம் வந்தா என்ன நடக்கும் தெரியுமா? – மறக்க முடியாத சம்பவம்!

2013 சாம்பியன்ஸ் லீக் போட்டியின் போது, தோனியின் கோபத்தை சந்தித்த முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா, அந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஒரு ஓவரில் தோனி ஈஸ்வர் பாண்டேவை அழைத்த போது, மோஹித் தவறுதலாக ஓடி வந்து பந்து வீசத் தொடங்கியதால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

MS Dhoni: இந்திய அணியில் இந்த பழக்கம் இருந்தால் மட்டுமே இடமா..? தோனி குறித்து இர்ஃபான் பதான் குற்றச்சாட்டு!

Irfan Pathan Blasts Dhoni: இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவுக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். 2008 ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு தனது செயல்பாட்டைப் பற்றி தோனியிடம் கேட்டபோது, திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை எனவும், இதனால் தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.