IPL 2026: ஐபிஎல்லில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா தோனி..? சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்!
MS Dhoni: கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பாகவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி உள்பட பல வீரர்கள் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஐபிஎல் 2026 இல் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று கூறியுள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு பிசிசிஐ, ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பாகவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி உள்பட பல வீரர்கள் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஐபிஎல் 2026 இல் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று கூறியுள்ளார். அவரது பங்களிப்பு குறித்த இறுதி முடிவு அணி நிர்வாகத்தால் எடுக்கப்படும். அடுத்த சீசனிலும் தோனி விக்கெட் கீப்பராக இருப்பாரா? இந்தக் கேள்விக்கு பதிலளித்த காசி விஸ்வநாத், “நான் அதைச் சொல்ல முடியாது. இது கிரிக்கெட் நிர்வாகிகளால் எடுக்கப்படும் ஒரு கிரிக்கெட் முடிவாகும். எனவே அவர் ஒரு பேட்ஸ்மேனாகவோ, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாகவோ அல்லது இம்பேக்ட் வீரராகவோ விளையாடுவாரா என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்” என்றார்.
ALSO READ: சிஎஸ்கே பயிற்சி முகாமில் தோனி.. க்யூட்டாக இளம் வீரர்கள் முன் நடனம்..!




தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா..?
Chennai, Tamil Nadu: Chennai Super Kings (CSK) CEO Kasi Viswanathan says, “We are very, very happy that India has won the World Cup. They have won back-to-back World Cups. And we are also delighted because two of our CSK players, Sanju and Shivam Dube, have performed extremely… pic.twitter.com/4PJ9YxPgMJ
— IANS (@ians_india) March 11, 2026
சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் கூறுகையில்,” என்னை பொறுத்தவரை எம்.எஸ். தோனி, ஐபிஎல் 2026 சீசனின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். சிஎஸ்கே அணியில் இணைந்துள்ள சஞ்சு சாம்சன் அவ்வபோது விக்கெட் கீப்பராக களத்தில் ஈடுபடலாம். 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய பங்கு வகித்த சிஎஸ்கே வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். மேலும் அவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து பேசிய காசி விஸ்வநாத், “இந்தியா உலகக் கோப்பையை தொடர்ச்சியாக வென்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், அதுவும். சிஎஸ்கே வீரர்கள் சஞ்சு மற்றும் சிவம் துபே இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது அணி இங்கும் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கிறது” என்று கூறினார்.
ALSO READ: எல்பிஜி தட்டுப்பாடு..! தள்ளிப்போகிறதா ஐபிஎல் 2026..? ஐபிஎல் தலைவர் விளக்கம்!
ஐபிஎல் 2026 வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 10 அணிகளும் வரவிருக்கும் சீசனுக்கு தயாராகும் வகையில் ஏற்கனவே பயிற்சிகளை தொடங்கியுள்ளன. சமீபத்தில் முடிவடைந்த 2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற வீரர்கள் விரைவில் அந்தந்த அணிகளில் இணைந்து ஐபிஎல் விளையாட பயிற்சி மேற்கொள்வார்கள்.