AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மலையாள சினிமாவில் ரசிகர்களும் பிரபலங்களும் கொண்டாடிய பாலன் தி பாய் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ

Balan The Boy OTT Review Here | மலையாள சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த படம் பாலன் தி பாய். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மலையாள சினிமாவில் ரசிகர்களும் பிரபலங்களும் கொண்டாடிய பாலன் தி பாய் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ
பாலன் தி பாய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Aug 2026 19:17 PM IST

மலையாள சினிமாவில் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பாலன் தி பாய். த்ரில்லர் ட்ராமா பாணியில் உருவான  இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் சிதம்பரம் இயக்கி உள்ள நிலையில் இயக்குநர் ஜித்து மாதவன் படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்து இருந்தார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன் சார்பாக தயாரிப்பாளர்கள் வெங்கட் கே. நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் ஃபென் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஆதிசேஷன் கே.ஆர். முஹம்மது ஜினான், பர்சானா பாலதிங்கல், ஜீன் பால் லால், டோலி ஜூன், கிரிஷ் ஏ. டி., டொவினோ தாமஸ், பீனா ஆண்டனி, பாபு அன்னூர், சாண்ட்ரா சந்திரன், அர்ச்சனா பத்மினி,
ரசித் கோயல், இரினா, அச்சுதானந்தன், ஆனந்த் ஏகர்ஷி, அதிரா கோபிநாத், சத்யன் கவில், ஜாலி ஆண்டனி, தம்பு வில்சன், முஹம்மது மக்புல் மன்சூர், இவான்ஷிகா பிரத்யுஷ், பத்மஜா அஜித்குமார், சஜின் அலி, அகில் ராஜ், பார்வதி மேனன், லிசம்மா,
ரியா அலெக்ஸ், ரபீக் பரக்கண்டி, புருசு, பிரயான் ஏ. எஸ்., ஹரீஸ் மண்ணஞ்சேரில், பிரவீன் பிள்ளை, குண்டுகாடு சாபு, வினோத், பி.கோபிநாதன், அஜித் கோபி, ஃபர்தாத் என்.வி., அபிஷேக் நாயர், ராஜேஷ் கே. பண்ட்யோட், பிங்கி ராணி மற்றும் திம்மப்பா குலால் ஆகியோர் முக்கிய வேடத்தின் நடித்து உள்ளனர்.

Also Read… கையில் வாளுடன்.. இந்த சிறுவன் எந்த நடிகர் தெரியுமா? அட அந்த நடிகரின் மகனா இது!

பாலன் தி பாய் படத்தின் கதை என்ன?

இந்த பாலன் தி பாய் படதில் உள்ள பாலன் பிறக்கும் போதே சிறையில் தான் இறுக்கிறார். தாய் சிறையில் இருந்த காரணத்தால் அவர் விடுதலை ஆகும்வரை சிறையிலேயே வளர்கிறான் பாலன். அவரது தாய் விடுதலை ஆகி வரும் போதே பாலனிடம் இந்த உலகத்தில் நமக்கு என்று நாம் மட்டும் போதும் மற்ற யாரும் வேண்டாம் என்று கூறுகிறார். இதன் காரணமாக அம்ம சொல்லும் கதை அனைத்தையும் மனதில் வைத்து அதற்கு ஏற்றார் போலவே பாலன் வாழ்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் ஒரு எதிர்பாராத சூழலில் பாலன் தனது தாயிடம் இருந்து தொலைந்துபோய் விடுகிறார். பிறகு அம்மா மகன் இருவரும் ஒருவரை ஒருவர் தேடி வருகின்றனர். இறுதியில் அவர்கள் எப்படி இணைந்தார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… குடும்பங்கள் கொண்டாடும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.. 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Follow Us