நடிகர் சூர்யாவிடன் அந்த மாதிரியான ஒரு கதையை சொன்னேன் – இயக்குநர் எச்.வினோத்
H Vinoth talks about Suriya | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் எச் வினோத். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா உடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டது குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் எச் வினோத். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் எச் வினோத். இவர் தற்போது இயக்கி தமிழ் சினிமாவில் வெளியான படம் ஜன நாயகன். இந்தப் படம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான இறுதிப் படம் என்பதால் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாஅபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் எச் வினோத் எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போதும் ஜன நாயகன் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இயக்குநர் எச் வினோத் தொடர்ந்து அளித்து வரும் பேட்டிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




நடிகர் சூர்யாவிடன் அந்த மாதிரியான ஒரு கதையை சொன்னேன்:
இந்த நிலையில் இயக்குநர் எச் வினோத் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, சூர்யாவிடம் ‘தீரன்’ போன்ற ஒரு கதையை நான் கூறினேன், ஆனால் அது நடக்கவில்லை. லிங்குசாமி சார் தான் அதன் தயாரிப்பாளராக இருந்தார்; அது குறித்த ஒரு செய்திக் கட்டுரையை நான் பார்த்திருந்தேன். அந்தச் செய்தியால் ஈர்க்கப்பட்டு, நான் உதவி இயக்குநராக இருந்தபோது, ’மேட் மேக்ஸ்’ (Mad Max) போன்ற ஒரு கருப்பொருளைக் கொண்ட திரைப்படத்திற்கான கதையை எழுதினேன் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… Anirudh: இசையமைப்பில் அழுத்தம் இருக்கிறதா? – விளக்கமாக பேசிய அனிருத்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Dir #HVinoth
– I narrated a story like #Theeran to #Suriya, but it didn’t happen. Lingusamy sir was the producer, and I had seen a news article about it.
– Inspired by that news, when I was an AD, I wrote a story for a film with a concept similar to Mad Max.…— Movie Tamil (@_MovieTamil) August 14, 2026
Also Read… Suriya: வீட்டில் அமைதி.. ஒரு கணவராக என்ன பின்பற்றவேண்டும்.. சூர்யா சொன்ன ரூல்ஸ்!