விஸ்வநாத் & சன்ஸ் முதல் மகுடம் வரை நாளை பான் இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
Theatre Release Movies Lis Here | இந்த வாரம் கோலிவுட் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் நிலையில் மற்ற மொழிகளில் பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நாளை வெளியாகும் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் 46-வதாக உருவாகி உள்ளது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ளார். மேலும் சூர்யாவின் தாயாக நடிகை ராதிகா சரத்குமார் நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர் நாக வம்சி இந்தப் படத்தை தயாரித்து உள்ளார். இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படம் நாளை 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பட்வாரா 1947 படம்: இந்தி மொழியில் உருவாகி உள்ள இந்த பட்வாரா 1947 படம் ஒரு பீரியட் ட்ராமா படமாக உருவாகி உள்ளது. இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சன்னி தியோல், ப்ரீத்தி ஜிந்தா, ஷபானா ஆஸ்மி, கரண் தியோல், அலி ஃபசல், அபிமன்யு சிங், குஷி ஹஜாரே, கனிக்கா கபூர் மற்றும் இஷா சந்திர் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படம் நாளை 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மகுடம் படம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷாலின் 35-வது படமாக உருவாகி உள்ளது மகுடம் படம். இந்தப் படத்தை விஷாலே எழுதி இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள் அஞ்சலி மற்றும் துஷாரா விஜயன் நடித்துள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படம் நாளை 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Also Read… விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தின் சென்சார் அப்டேட் வெளியானது



