நடிகர் வைபவின் மாறுவேஷம் படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்
Maaruvesham will be released on October 1st 2026 | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் வைபவ். இவரது அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள மாறுவேஷம் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் வைபவ். இவர் தொடர்ந்து படங்களில் நாயகனாக மட்டும் இன்றி மற்ற நாயகன்களின் படங்களிலும் தொடர்ந்து சிறப்பு வேடங்களிலும் நடித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து பெருசு மற்றும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் ஆகிய இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகும் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. பெரும்பாலும் நடிகர் வைபவ் நாயகனாக நடித்து உள்ள படங்கள் காமெடியை மையமாக வைத்தே வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் நடிகர் வைபவ் நாயகனாக நடிக்கும் படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது தனது தொடர் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வகையிலான படத்தில் நடிகர் வைபவ் நடித்து உள்ளார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




நடிகர் வைபவின் மாறுவேஷம் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்:
அந்த வகையில் நடிகர் வைபவ் தற்போது நாயகனாக ஒரு மிஸ்ட்ரி த்ரில்லர் கதையில் நடித்து உள்ளார். அந்தப் படத்திற்கு மாறுவேஷம் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் நடிகர் வைபவிற்கு ஜோடியாக பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட வியானா நாயகியாக நடித்து உள்ளார். தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… விரைவில் வெளியாகும் மண்டாட்டி படத்தின் 2-வது சிங்கிள் – சூரி கொடுத்த சூப்பர் அப்டேட்
மாறுவேஷம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Mark your calendar 💥…Mystery unfolds on OCTOBER 1 🩸🔍#Maaruvesham from #October1 🔥
🎶 @oscl8r1@actor_vaibhav @viyanarr_viyana #Ramki @MunishkanthR @Paulbritto93 #Indumathy @actorvivekpra @georgevijayoffi @srini_filmmaker @DOP_BKR @srikanth_nb @Dineshkasi1 @sads82sumanth… pic.twitter.com/JPOp76O76Q
— Saregama South (@saregamasouth) August 12, 2026
Also Read… விஜய் சேதுபதியின் 56-வது படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அட்லி – வைரலாகும் பதிவு!