விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் வரும் அந்த காட்சி உண்மையிலேயே சூர்யா வாழ்க்கையில் நடந்த சம்பவம் – வைரலாகும் தகவல்
Vishwanath And Sons Movie | நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் மற்றும் சினிமா தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி கவனத்தை ஈர்த்து வருபவது போல சூர்யாவின் சொந்த வாழ்க்கை தொடர்பான செய்திகளும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி நடிகர் சூர்யா அவருடன் இணைந்து நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். அவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இவர்கள் வளரும் வரை ஜோதிகா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். அதனைத் தொடர்ந்து சமீப காலமாக படங்களில் தொடர்ந்து படங்களில் நடிப்பதை கவனம் செழுத்தி வருகிறார்.
தொடர்ந்து சூர்யா – ஜோதிகா தொடர்பான செய்திகள் மட்டும் இல்லாமல் அவர்களின் குழந்தைகள் தொடர்பான செய்திகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சண்ஸ் என்ற படத்தில் சூர்யாவின் சொந்த வாழ்க்கையில் நடந்த விசயத்தை வைத்துள்ளது குறித்து இயக்குநர் கூற அதனை சூர்யா பேட்டியில் விளக்கமாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




படத்தில் அந்த காட்சி உண்மையிலேயே சூர்யா வாழ்க்கையில் நடந்த சம்பவம்:
இயக்குநர் வெங்கி அட்லூரி கூறும்போது, டிரெய்லரில் சூர்யா சார் அந்தச் குழந்தையின் பாதங்களை தரையில் பட வைக்கும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். உண்மையில் சூர்யா சாரது நிஜ வாழ்க்கையிலும் அப்படியொரு சம்பவம் நடந்தது, என்று குறிப்பிட்டார். அதுகுறித்து சூர்யா கூறும்போது, நான் எப்போதும் பயணங்களிலேயே இருந்ததால், திருமணத்திற்குப் பிறகுதான் ஒரு கணவனாக இருப்பது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டேன்.
‘ஒரு தாய் பிறக்கும்போதுதான் ஒரு குழந்தையும் பிறக்கிறது’ என்று ஒரு சொல்வழக்கு உண்டு. என் மகள் தியா பிறந்தபோது, என்னால் அவளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. அதனால், தியா பிறந்த பிறகுதான் நான் எனது முதல் வீட்டை வாங்கினேன். அந்த வீட்டிற்குள் நுழைவதற்கு முன், முதலில் தியாவின் பாதங்களை தரையில் பட வைத்தேன். அதன் பிறகுதான் நாங்கள் அனைவரும் ஒன்றாக வீட்டிற்குள் நுழைந்தோம், என்று கூறினார்.
Also Read… தர்மன் படத்தின் நெக்ஸ்ட் ஷெடியூல் எப்போது? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Dir. #VenkyAtluri: In the trailer, there was a shot where Suriya sir makes the child touch the floor with her feet. So, that actually happen in Suriya sir’s real life.#Suriya:
– I was always travelling, so only after marriage did I understand what it means to be a husband.… pic.twitter.com/pZ3fCv1p90— Movie Tamil (@_MovieTamil) August 11, 2026
Also Read… அஜித் குமாருடன் முதல்முறையாக கூட்டணி சேரும் இயக்குநர் சங்கர்? வைரலாகும் தகவல்