AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தர்மன் படத்தின் நெக்ஸ்ட் ஷெடியூல் எப்போது? வைரலாகும் தகவல்

Dharman Movie Shooting | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ரஜினிகாந்த் தற்போது தர்மன் படத்தில் நடித்து வருவதால் அந்தப் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தகவல்கள் வைரலாகி வருகின்றது.

தர்மன் படத்தின் நெக்ஸ்ட் ஷெடியூல் எப்போது? வைரலாகும் தகவல்
தர்மன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 10 Aug 2026 10:45 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி வருகின்றது. இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கிய இந்த ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி அக்டேபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடிந்தது நடிகர் ரஜினிகாந்த் அவரது 173-வது படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்தினார். அதன்படி இந்தப் படத்தினை இயக்கும் இயக்குநர் குறித்த குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் இறுதியாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உறுதியானார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்தப் படத்தினை உலக நாயகன் கமல் ஹாசன் தயாரித்து வரும் நிலையில் படத்திற்கு தர்மன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் சிம்ரன், யோகி பாபு மற்றும் ராஷி கண்ணா இருவரும் முக்கிய கதாபபத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மன் மடத்தின் நெக்ஸ்ட் ஷெடியூல் எப்போது?

தொடர்ந்து தர்மன் படத்தின் கதை மற்றும் ஷூட்டிங் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது வெளியான தகவலின்படி ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நாளை தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு மருத்துவராக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 2027-ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் தர்மன் படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அந்த படத்துடன் விஸ்வநாத் & சன்ஸ் படத்தை ஒப்பிடாதீர்கள் – இயக்குநர் வெங்கி அட்லூரி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நான் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாததற்கு இதுதான் காரணம் – நடிகை நயன்தாரா ஓபன் டாக்

Follow Us