AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் லக்‌ஷ்மி பிரியாவிற்கு ஆதரவு குரல் கொடுத்த டிடிஎஃப் – எதிர்க்கும் போட்டியாளர்கள்… வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 74-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்றைய நாளிற்கான 2-வது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பிக்பாஸில் லக்‌ஷ்மி பிரியாவிற்கு ஆதரவு குரல் கொடுத்த டிடிஎஃப் – எதிர்க்கும் போட்டியாளர்கள்… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Nov 2026 13:07 PM IST

பிக்பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் தொடங்குவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தி மொழியில் தொடங்கி ஒளிபரப்பாகி வந்தது. அந்த இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்கள் அனைவரிடமும் பரிச்சையம் இல்லை என்றாலும் ஒரு சிலருக்கு நன்கு தெரிந்து இருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நோக்கம் என்ன என்பதற்கான புரிதலே இல்லாமல் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை பார்த்த தமிழக மக்களிடையே இது மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டும் இன்றி இந்த நிகழ்ச்சியில் அவர்கள் திரையில் பார்த்த பிரபலங்களின் உண்மையான குணம் என்ன என்பதைப் பார்க்க மக்களுக்கும் ஆர்வமாக இருந்தது. இதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனில் இருந்தே மக்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தமிழ் மொழியில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து 9 சீசன்கள் முடிவடைந்து தற்போது 10-வது சீசனை எட்டியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து போட்டியாளர்களிடையே சண்டை மட்டுமே ஏற்பட்டு வரும் நிலையில் அவர்களிடையே தற்போது டிக்கெட் டு ஃபினாலே பில்டப் வாரம் என்று தொடர்ந்து டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றது.

பிக்பாஸில் லக்‌ஷ்மி பிரியாவிற்கு ஆதரவு குரல் கொடுத்த டிடிஎஃப்:

இந்த நிலையில் இன்று டாஸ்க் விளையாடிய லக்‌ஷ்மி பிரியாவிற்கு சக போட்டியாளர்கள் மதிப்பெண் கொடுக்கும் போது அவர்களின் வன்மத்தை கக்கும் விதமாக குறைவான மதிப்பெண்களை வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் தவறாக நடந்துகொள்வதை சுட்டிக்காட்டிய வாசன் அதன் காரணமாகவே லக்‌ஷ்மி பிரியாவிற்கு முழு மதிப்பெண்ணான 5 மதிப்பெண்ணை வழங்குவதாக கூறினார். இதனால் மற்ற போட்டியாளர்கள் வாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… எந்த தைரியத்துல என்ன வில்லனா நடிக்க சொல்ற? மம்முட்டி குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர் தனஞ்செயன்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நயன்தாராவின் பர்த்டே.. மூக்குத்தி அம்மன் 2 பட BTS வீடியோவை பகிர்ந்த படக்குழு!

Follow Us