நயன்தாராவின் பர்த்டே.. மூக்குத்தி அம்மன் 2 பட BTS வீடியோவை பகிர்ந்த படக்குழு!
Nayanthara Birthday Special: தென்னிந்திய திரைத்துறையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்திவருபவர் நயன்தாரா. இவரின் நடிப்பில் இறுதியாக மூக்குத்தி அம்மன் 2 படமானது வெளியான நிலையில், ஓரளவு வரவேற்பை பெற்றது. இன்று (18/11/2026) நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து அவரின் BTS வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.
நடிகை நயன்தாரா (Nayanthara) தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்துவருகிறார். மலையாள சினிமாவின் மூலமாக கதாநாயகியாக நுழைந்த இவர், தற்போது பான் இந்திய சினிமாவே கொண்டாடும் நாயகியாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்த 2026ம் ஆண்டில் மட்டுமே இவரின் நடிப்பில், டாக்ஸிக் (Toxic), ஹாய் (Hi Movie) மற்றும் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2) என மூன்று படங்கள் வெளியாகியிருந்தது. அதில் இறுதியாக வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி (Sundar C) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்திருந்தார். பக்தி மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இன்று (18/11/2026) நடிகை நயன்தாரா தனது 42வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார். அந்த விதத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து, நயன்தாராவின் BTS வீடியோவை படக்குழு பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளது.




இதையும் படிங்க: ஓ.எம் முதல் ஆகாசம்லோ ஓகா தாரா வரை… இந்த வாரம் எந்த படத்தை ஃபர்ஸ்ட் பார்க்க போறீங்க?
மூக்குத்தி அம்மா 2 படக்குழு பகிர்ந்த நயன்தாராவின் BTS வீடியோ பதிவு:
To the one who continues to rule millions of hearts! An icon in every frame and an inspiration beyond the screen. Happy Birthday, #Nayanthara! ♥️ https://t.co/oMpahwygdi
— Vels Film International (@VelsFilmIntl) November 18, 2026
நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட்:
நடிகை நயன்தாரா எகனாவே 2020ம் ஆண்டில் மூக்குத்தி அம்மன் 1 படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் சக்திவாய்ந்த கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார். இப்படத்தின் வரவேற்ப்பிற்கு பிறகு, மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் அம்மனாக நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியிருந்த நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். போலீஸ் மற்றும் அம்மன் என இரு வேடங்களில் இப்படத்தில் நயன்தாரா நடித்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது.
இதையும் படிங்க: கடவுள் பாதி மிருகம் பாதி… பிக்பாஸில் டாஸ்கின் போது கடுப்பான முனியம்மாள் – வைராலும் வீடியோ!
இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட நிலையில், ரூ 100 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. ஒரு பெண்ணை மையமாக கொண்டு ரூ 100 கோடி பட்ஜெட்டில் தமிழில் உருவாக்கப்பட்ட முதல் படமாக இது அமைந்துள்ளது என கூறப்படுகிறது. மேலும் இப்படமும் எதிர்பார்த்திருந்த அளவுக்கு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.