AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கடவுள் பாதி மிருகம் பாதி… பிக்பாஸில் டாஸ்கின் போது கடுப்பான முனியம்மாள் – வைராலும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. அதில் ஒரு டாஸ்கான கடவுள் பாதி மிருகம் பாதி டாஸ்கின் போது முனியம்மாள் கடுப்பாகி வெளியேறுகிறார்.

கடவுள் பாதி மிருகம் பாதி… பிக்பாஸில் டாஸ்கின் போது கடுப்பான முனியம்மாள் – வைராலும் வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 18 Nov 2026 10:31 AM IST

தமிழ் சின்னத்திரையில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பல ட்விஸ்ட்கள் நடைப்பெற்று வருகின்றது. முந்தைய சீசன்களைப் போல அல்லாமல் இந்த சீசனில் பல புது விதமான டாஸ்குகளை நிகழ்ச்சி குழு போட்டியாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு மட்டும் இன்றி பார்வையாளர்களுக்கு அதிக ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 10 வாரங்கள் முடிவ்வடைந்து தற்போது 11-வது வாரத்தில் சென்று கொண்டு இருக்கின்றது. ஒவ்வொரு வாரமும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போலவே நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கின்றது.

மொத்தம் 24 பேர் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் 14 போட்டியாளர்கள் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்களே உள்ளனர். இந்த நிலையில் இந்தப் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் அதிகமாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பிக்பாஸில் டாஸ்கின் போது கடுப்பான முனியம்மாள் – வைராலும் வீடியோ:

அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 11-வது வாரம் டிக்கெட் டு ஃபினாலே பில்டப் டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. அதில் ஒரு டாஸ்க்காக இன்று கடவுள் பாதி மிருகம் பாதி நடைப்பெற்று வருகின்றது. இதில் ஒரு நபர் அரியணையில் கிரீடத்துடன் அமரும் போது மற்ற போட்டியாளர்கள் என்ன வேண்டுமானாலும் அவரிடம் கேள்வி கேட்கலாம் பேசலாம். அதனை அந்த அரியணையில் அமர்ந்துள்ள நபர் எந்த அளவிற்கு பொருமை காக்கிறார்கள் என்பதே டாஸ்க். இதில் முனியம்மாள் அரியணையில் அமரும் போது லக்‌ஷ்மி பிரியா கேள்விகளால் அவரை லெஃப்ட் ரைட் வாங்குகிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ரிலீஸிற்கு மூன்று நாட்களே உள்ள ஓ.எம் படம்… புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜி.வி.பிரகாஷ் – மாளவிகா மனோஜ் நடிக்கும் புது படத்தின் டைட்டில் இதுதான் – வெளியான ஃபர்ஸ்ட் லுக்ஸ்!

Follow Us