AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அஜித்திற்கு வில்லனாகும் சிவராஜ்குமார்? வைரலாகும் டேர்டெவில் படத்தின் அப்டேட்

Daredevil Movie Update Here | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டேர்டெவில். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அஜித்திற்கு வில்லனாகும் சிவராஜ்குமார்? வைரலாகும் டேர்டெவில் படத்தின் அப்டேட்
சிவராஜ்குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Nov 2026 11:23 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar). இவரது நடிப்பில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு படம் திரையரங்குகளில் வெளியானது. அதனை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக அவர் அதிக அளவில் தனது ரேஸிங்கில் கவனம் செலுத்தி வந்தார். அதே நேரத்தில் நடிகர் அஜித் குமாரின் புதுப் படத்திற்கு ப்ரீ புரடெக்‌ஷன் வேலைகளும் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் அந்த ரேஸிங் பணிகளை அனைத்தும் முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பிய நிலையில் தனது புதுப் படத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தினை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்க உள்ளார். இவர்தான் நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஷாலினி அஜித்குமார் தான் இந்தப் படத்தினை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு டேர்டெவில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடியே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

டேர்டெவில் படத்தில் அஜித்திற்கு வில்லனாகும் சிவராஜ்குமார்?

இந்த நிலையில் டேர் டெவில் படம் குறித்து தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்தத் திரைப்படத்தில் முதன்மை வில்லன் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமார் நடிக்கிறார். இந்தத் தகவலை சுரேஷ் சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், இந்தத் திரைப்படத்தில் மிகவும் வலிமையான வில்லன் கதாபாத்திரம் ஒன்று உள்ளது. இதற்காகப் பல பெயர்களை நாங்கள் பரிசீலித்து வந்தோம்.

அஜித்குமாருக்கு சிவ ராஜ்குமார் சார் மீது மிகுந்த மரியாதை உண்டு, எனவே அவரை அணுக முடிவு செய்தோம். 3–4 மாதங்களுக்கு முன்பே அவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆதிக் ரவிச்சந்திரன் கதையைச் சொன்னபோது, ​​சிவண்ணா அதற்குச் சாதகமான பதிலையே அளித்தார். அதன் பிறகு, அஜித்குமாரே அவரிடம் நேரடியாகப் பேசினார். அவர் நவம்பர் 17–18 தேதிகளில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… அந்தப் படம் வெற்றியடையுமா என்று பயந்துகொண்டே இருந்தேன் – இயக்குநர் சுந்தர் சி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் கார்த்தியின் மார்ஷல் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

Follow Us