தனுஷின் ஓம் படத்தின் ட்ரெய்லரை கொண்டாடும் ரசிகர்கள்!
Om Movie Trailer: தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்து, பான் இந்திய சினிமா வரையிலும் மிகவும் பிரபலமானவர்தான் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம்தான் ஓம். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இதன் அதிரடி ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது.
கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் சினிமாவில் இதுவரை மொத்தமாக 54 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் கர (Kara Movie). இதை போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா (Director Vignesh Raja) இயக்கியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு தமிழில் தனுஷ் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் ஓம்: சாப்ராட் 1 (Om: Chapter 1). இந்த படத்தை அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar Pariasamy) இயக்க, தனுஷின் வவுண்டர் பார் பிலிசும் மற்றும் ஆர்.டேக் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படமானது தனுஷின் 55வது படமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஓம் திரைப்படமானது 2026 நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த ட்ரெய்லர் சிறப்பாக மற்றும் அதிரடி காட்சிகளுடன் வெளியாகியுள்ள நிலையில், இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அவர காப்பாத்தாம இங்க இருந்து வராதா இல்ல… கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் சத்யவான் சாவித்ரி திரைப்படத்தின் ட்ரெய்லர்!
தனுஷின் ஓம் திரைப்படத்தின் ட்ரெய்லர் தொடர்பாக படக்குழு வெளியிட்ட பதிவு:
Apologies for the delay, and it’s now time to unleash the mayhem 🔥
#OM TRAILER OUT NOW.
▶️ https://t.co/sCECMmVyi6
Coming to the screens worldwide on November 20.
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @PenMovies #PenMarudhar @ThinkStudiosInd @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 13, 2026
தனுஷின் ஓம் திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:
அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயங்கிவந்த திரைப்படம்தான் ஓம். இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருடன் முக்கியமான வேடத்தில் மலையாள நடிகர் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் மம்முட்டி தனுஷின் தந்தையாக நடித்துள்ளாராம். மேலும் சாய் பல்லவி ஐபிஎஸ் நித்யா ரெடி என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் ஸ்ரீலீலா தனுஷின் மனைவியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைப்பகுதிகளில் நடந்த செம்மர கடத்தல் தொடர்பான நிஜ கதையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளதாம்.
இதையும் படிங்க: என் கணவர் அதை பற்றி கவலைப்பட்டதே இல்லை – கியாரா அத்வானி பகிர்ந்த விஷயம்!
இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாகாவே அமைந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் குழு யு/ ஏ 16+ என்ற சென்சார் சான்றிதழை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால இப்படத்தி 16 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.