AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : ஒரே நாளில் 640 சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 14, 2026) தங்கம் கடும் சரிவை சந்தித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : ஒரே நாளில் 640 சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Nov 2026 10:21 AM IST

சென்னை, நவம்பர் 14 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (நவம்பர் 13, 2026) ஒரே நாளில் ரூ.960 சரிந்த நிலையில், இன்று (நவம்பர் 14, 2026) மீண்டும் தங்கம் விலை சரிந்துள்ளது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை

புவிசார் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் போர் காரணமாக தங்கம் விலை கடும் உச்சத்தில் இருந்தது. அதுவே, நாளடைவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆகியவை தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி சரிவை சந்திக்க காரணமாக இருந்தது. இவ்வாறு ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ஆண்டின் தொடக்கத்தில் ரூ.16,000-க்கு மேல் சென்ற தங்கம், தற்போது வெறும் ரூ.12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : எல் நினோ எதிரொலி.. பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் RBI வட்டி விகிதத்தை உயர்த்தலாம்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.12,615-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் 13,762-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,096-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.195-க்கும், ஒரு கிலோ ரூ.1,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : பிபிஎஃப் திட்டம் முதிர்ச்சி அடைந்தால் என்ன செய்ய வேண்டும்?.. இத கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லுமா?

 

Follow Us