10 நாட்களில் ரூ.4,000 சரிந்த தங்கம் விலை.. கடும் சரிவுக்கு இதுதான் காரணம்.. முழு விவரம்!
Why Gold Price Plummeted 4000 Rupees in November | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,000 சரிவை சந்தித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடும் உச்சத்தில் இருந்த தங்கம் விலை (Gold Price), அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்தது. இந்த நிலையில் தான், ஆண்டின் இறுதியில் தங்கம் விலை மீண்டும் விலை உயர்வை சந்திக்கும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது நவம்பர் மாதம் ஆகும் நிலையில், தங்கம் மீண்டும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை வெறும் 10 நாட்களில் ரூ.4,000 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் இத்தகைய கடும் சரிவை சந்திக்க காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
10 நாட்களில் கடும் சரிவை சந்தித்த தங்கம்
| தேதி | 1 கிராம் | 8 கிராம் | 10 கிராம் |
| 04 நவம்பர் 2026 | ரூ.13,100 | ரூ.1,04,800 | ரூ.1,31,000 |
| 05 நவம்பர் 2026 | ரூ.13,385 | ரூ.1,07,080 | ரூ.1,33,850 |
| 06 நவம்பர் 2026 | ரூ.13,140 | ரூ.1,05,120 | ரூ.1,31,400 |
| 07 நவம்பர் 2026 | ரூ.13,160 | ரூ.1,05,280 | ரூ.1,31,600 |
| 08 நவம்பர் 2026 | ரூ.13,160 | ரூ.1,05,280 | ரூ.1,31,600 |
| 09 நவம்பர் 2026 | ரூ.13,255 | ரூ.1,06,040 | ரூ.1,32,550 |
| 10 நவம்பர் 2026 | ரூ.13,210 | ரூ.1,05,680 | ரூ.1,32,100 |
| 11 நவம்பர் 2026 | ரூ.13,015 | ரூ.1,04,120 | ரூ.1,30,150 |
| 12 நவம்பர் 2026 | ரூ.12,815 | ரூ.1,02,520 | ரூ.1,28,150 |
| 13 நவம்பர் 2026 | ரூ.12,695 | ரூ.1,01,560 | ரூ.1,26,950 |
நவம்பர் 01, 2026 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.13,100-க்கும், 10 கிராம் ரூ.1,26,950-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவே இன்று (நவம்பர் 13, 2026) ஒரு கிராம் தங்கம் ரூ.12,695-க்கும், 10 கிராம் தங்கம் ரூ.1,26,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, 10 நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.405 குறைந்துள்ள நிலையில், 10 கிராமுக்கு ரூ.4,050 குறைந்துள்ளது.
இதையும் படிங்க : பிஸ்கட் தொழிலில் இறங்கிய அம்பானி குழுமம்.. 9 புதிய ரக பிஸ்கட்டுகள் அறிமுகம்!
தங்கம் விலை கடும் சரிவை சந்திக்க காரணம் என்ன?
சர்வதே சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி கடும் விலை சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தான் இந்தியாவிலும் தங்கம் மற்றும் வெள்ளி தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதுமட்டுமன்றி, அமெரிக்க மத்திய வங்கி ஏற்கனவே தனது வட்டி விகிதங்களை உயர்த்தியதும், இனி வரும் காலங்களில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : Gold Price : மூன்று நாட்களில் ரூ.3,160 சரிந்த தங்கம் விலை.. கடும் சரிவுக்கு காரணம் என்ன?
ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லும் தங்கம் விலை?
தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தால் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் பட்சத்தில் தங்கம் விலை மேலும் சரியும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.