AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மேகதாது அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது – பிரதமர் முன்னிலையில் கர்நாடக முதல்வர் பேச்சு

Karnataka Mekedatu Dam Controversy : பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், பெரிதும் எதிர்பார்க்கப்படும் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை வழங்குமாறு பிரதமரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார். மேலும் மேகதாது அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் பேசினார்.

மேகதாது அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது – பிரதமர் முன்னிலையில் கர்நாடக முதல்வர் பேச்சு
முதல்வர் விஜய் - டிகே சிவகுமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Nov 2026 20:39 PM IST

கர்நாடக மாநிலம் மைசூருவில் இந்தியாவின் முதல் எல்இடி டோம் கோளரங்கமான காஸ்மோஸ் மைசூரு கோளரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) நவம்பர் 13, 2026 இன்று திறந்து வைத்தார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், பெரிதும் எதிர்பார்க்கப்படும் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை வழங்குமாறு பிரதமரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.

மேகதாது அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது என கர்நாடகா முதல்வர் பேச்சு

நிகழ்வில் பேசிய அவர், “மேகதாது திட்டத்தின் கட்டுமானத்திற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம். உச்ச நீதிமன்றம் ஏற்கனவே மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இப்போது மத்திய அரசிடமிருந்து இறுதி ஒப்புதல் மட்டுமே தேவைப்படுகிறது. மேக்கேதாட்டு திட்டம் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிற்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது, மாறாக அவர்களுக்கும் பயனளிக்கும். என்றார்.

இதையும் படிக்க : கோவையில் தவெக நிர்வாகி மீது பாலியல் சீண்டல் மற்றும் சாதிய வன்கொடுமை புகார் – பெண்ணிடம் 3 மணி நேரமாக விசாரணை

மேலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்ந்து வளர மேக்கேதாட்டு திட்டம் நமக்குத் தேவை. தயவுசெய்து இந்த திட்டத்திற்கு உதவுங்கள் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரி ரங்கன் அறிக்கையையும் குறிப்பிட்ட கர்நாடகா முதல்வர், “மேற்குத் தொடர்ச்சி மலைகள் பிரச்னை மற்றும் கஸ்தூரி ரங்கன் அறிக்கை குறித்து விவாதிக்க, நாங்கள் அனைவரும் ஒன்றாக டெல்லிக்கு வந்து உங்களைச் சந்திப்போம்” என்றார்.

இந்நிலையில் நவம்பர் 13, 2026 இன்று மதுரையில் புத்தகத் திருவிழாவை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமாரிடம் மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “தொடர்ந்து அவர் இப்படி சர்ச்சையாக பேசிவருகிறார் என்றார்.

மேலும் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம். மேகதாது விவகாரத்தில் அவர்களால் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது. வனத்துறை அனுமதி உள்ளிட்ட எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்கள் அடவாடியாக செயல்பட்டால் அது இந்திய ஒருமைப்பாட்டை பாதிக்கும். ஒன்றிய அரசு இதை அனுமதிக்க கூடாது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : கூட்டத்தை பிளந்து ஓடி வந்த வெள்ள சட்டை.. ஒரு நொடி பதறிய முதல்வர் ஜோசப் விஜய்.. கொளத்தூரில் நடந்தது என்ன!

இதனிடையே, மேகதாது அணை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதி இருந்தார்.அதில், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை குறிப்பிட்டிருந்தார். அத்துடன், தமிழக அரசின் அனுமதி இன்றி மேகதாது அணை கட்ட எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி இருந்தார். இதை குறிப்பிட்டு, காவிரியின் அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடக அரசு தனது சொந்த நிலத்தில் அணைக்கட்ட உச்சநீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

Follow Us