காக்கிச் சட்டை கனவு நனவாகிறது.. தமிழக காவல்துறையில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உத்தரவு.. முதல்வர் விஜய் அறிவிப்பு!
Tamil Nadu Police Vacancies : தமிழக காவல் துறையில் உள்ள சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனால்,விரைவில் காவலர்கள் தேர்வு அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக காவல்துறையில் சுமார் 10,000 காலி பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக விரைவில் காவலர்கள் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டிருந்தது. இதில், சட்டம் ஒழுங்கை மேலும் பேணி காப்பதற்காக எதிர்வரும் 6 மாதங்களுக்குள் 10 ஆயிரம் காவலர்கள் தேர்வு செய்யுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டார். இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ஏற்ற பிறகு குற்றப் பின்னணி உடைய 19 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் 10 ஆயிரம் காவலர்கள் தேர்வு
தமிழக காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக சுமார் 10,000 முதல் 15000 காவலர்களை நியமிக்கும் பணியை முதல்வர் விஜய் உத்தரவுப்படி தொடங்கியுள்ளோம். நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்ந்த விவரங்களை முதல்வர் நேரடியாக வருகிறார். தமிழகத்தில், சுமார் 6,700 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 2,800 வழக்குகள் மே மாதம் 10- ஆம் தேதிக்கு முன்னதாக நடந்த சம்பவங்கள் ஆகும். இந்த வழக்குகளில் அடையாளம் காணப்பட்ட சுமார் 3229 குற்றவாளிகளில் 152 பேரைத் தவிர அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: 37 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு.. மேற்குவங்காளத்தை சேர்ந்த 4 பேருக்கு.. 12 ஆண்டுகள் சிறை.. கோவை நீதிமன்றம் தீர்ப்பு!




எஸ்.ஐ. காலி பணியிடங்கள் எவ்வளவு
அத்துடன், தமிழகத்தில் குற்றங்களை தடுப்பதற்காக நேரடியாக காவலர்கள் ரோந்து பணி மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முழுமையான வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக முதல் அமைச்சரின் நேரடி மேற்பார்வையின் கீழ் அரசு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக காவல்துறையில் விரைவில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் நடைபெறும் என்பதை எதிர்பார்க்கலாம். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக காவல்துறையில் எத்தனை உதவி ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது தொடர்பான அறிக்கையை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கேட்டிருந்தார்.
விரைவில் எஸ்.ஐ. காவலர்கள் தேர்வு அறிவிப்பு
இது தொடர்பாக அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை சுமார் ஒரு வார காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் டிஜிபி குறிப்பிட்டிருந்தார். அதன்படி, காவல் உதவி ஆய்வாளர்கள் காலி பணியிடங்கள் எண்ணிக்கை தொடர்பான அறிக்கை டிஜிபியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், தமிழக காவல்துறையில் 6 மாதத்திற்குள் 10000 காவலர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் பரபரப்பு.. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்கள்.. 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!