AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்திய அனிமே கலைஞர்களுக்கு ஜாக்பாட்.. Bleach இயக்குநர் நடுவராக பங்கேற்கும் போட்டி.. ரூ.10 லட்சம் யென் பரிசு!

இந்தியாவில் ஜப்பானிய அனிமே தொடர்கள் மற்றும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் அனிமி இந்தியா 2026  போட்டியில் 1,500-க்கும் மேற்பட்ட இந்திய படைப்பாளர்களின் படைப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்

இந்திய அனிமே கலைஞர்களுக்கு ஜாக்பாட்.. Bleach இயக்குநர் நடுவராக பங்கேற்கும் போட்டி.. ரூ.10 லட்சம் யென் பரிசு!
Bleach Director Noriyuki Abe
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Nov 2026 19:10 PM IST

ஜப்பானின் பிரபலமான Bleach அனிமே தொடரின் இயக்குநர் நோரியுகி அபே, இந்தியாவில் நடைபெறும் அனிமே படைப்பாளர்களுக்கான போட்டியில் நடுவராக பங்கேற்க உள்ளார். ஹைதராபாத்தில் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் அனிமி இந்தியா 2026  (Anime India 2026) நிகழ்ச்சியில், 1,500-க்கும் மேற்பட்ட இந்திய படைப்பாளர்களின் படைப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

இந்திய அனிமே படைப்பாளர்களுக்கு அரிய வாய்ப்பு

இந்தியாவில் ஜப்பானிய அனிமே தொடர்கள் மற்றும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக, Bleach, Naruto, One Piece உள்ளிட்ட அனிமே தொடர்கள் இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள அனிமே கலைஞர்கள் தங்களது திறமைகளை சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக அனிமி இந்தியா ஹைதரபாத் 2026 ( Anime India Hyderabad 2026) நிகழ்ச்சி அமையவுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நவம்பர் 14, 2026 நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஜப்பானின் பிரபல அனிமே இயக்குநர் நோரியுகி அபே சிறப்பு நடுவராகப் பங்கேற்க உள்ளார். இந்திய படைப்பாளர்கள் உருவாக்கிய அனிமே கதைகள் மற்றும் குறும்படங்களை அவர் உள்ளிட்ட நடுவர் குழுவினர் மதிப்பீடு செய்ய உள்ளனர்.

ப்ளீச் இயக்குநர் நோரியுகி அபே நடுவராக பங்கேற்பு

ஜப்பானிய அனிமே உலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக நோரியுகி அபே திகழ்கிறார். இவர் Bleach, Yu Yu Hakusho மற்றும் Great Teacher Onizuka போன்ற பிரபல அனிமே தொடர்களில் பணியாற்றியுள்ளார். மேலும், Studio Pierrot நிறுவனத்தின் பல்வேறு அனிமே தயாரிப்புகளில் பணியாற்றியுள்ள இவர், Boruto அனிமே தொடரின் தலைமை இயக்குநராகவும் செயல்பட்டுள்ளார்.

இவருடன் தி அனிமி டைம்ஸ் கம்பெனி நிறுவனத்தின் தலைவர் ஹிடியோ கட்சுமாட்டா, அவெக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டோமோஹிகோ இவாசே மற்றும் IndianTelevision.com குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அனில் வான்வாரி ஆகியோரும் நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்திய படைப்பாளர்களின் படைப்புகளை ஜப்பானிய அனிமே துறையில் அனுபவம் பெற்ற நிபுணர்கள் நேரடியாக மதிப்பீடு செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow Us