இந்தியாவின் முதல் எல்இடி டோம் கோளரங்கம்.. மைசூருவில் திறந்து வைத்த பிரதமர் மோடி.. என்னென்ன சிறப்பம்சங்கள்?
India's First LED Dome Planetarium : இந்தியாவின் முதல் எல்இடி டோம் கோளரங்கத்தை கர்நாடக மாநிலம் மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். இந்த கேளரங்கத்தில் 42.7 மில்லியன் பிக்சல்கள், 15 மீட்டர் அகலமுள்ள எல்இடி டோம் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் எல்இடி டோம் கோளரங்கத்தை கர்நாடக மாநிலம் மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். இந்த கேளரங்கத்தில் 42.7 மில்லியன் பிக்சல்கள், 15 மீட்டர் அகலமுள்ள எல்இடி டோம் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோளரங்கம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் கல்வியில் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் எல்இடி டோம் கோளரங்கம்
கர்நாடக மாநிலம் மைசூருவில் இந்தியாவின் முதல் எல்இடி டோம் கோளரங்கமான காஸ்மோஸ் மைசூரு கோளரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 13, 2026 இன்று திறந்து வைத்தார். இந்தியாவில் அறிவியல் கல்வி மற்றும் வானியல் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இந்த கோளரங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. மேலும் உலகிலேயே எல்இடி டோம் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள கோளரங்கங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, 8கே தரத்தில் அதிகமான தெளிவான கொண்ட காட்சிகள் மூலம் பார்வையாளர்கள் விண்வெளியை நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோளரங்கம் இந்திய வானியற்பியல் நிறுவனம் மற்றும் மைசூரு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய திட்டமாகும். இதற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அணுசக்தித் துறை மற்றும் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் ஆகியவை ஆதரவு வழங்கியுள்ளன.
42.7 மில்லியன் பிக்சல்கள் மற்றும் 6,148 LED பேனல்கள்
காஸ்மோஸ் மைசூரு கோளரங்கத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் அதிநவீன எல்இடி டோம் தொழில்நுட்பமாகும். பொதுவாகக் கோளரங்கங்களில் புரொஜெக்டர்கள் மூலம் குவிமாடத்தின் மீது விண்வெளிக் காட்சிகள் திரையிடப்படும். ஆனால், மைசூருவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோளரங்கத்தில் புரொஜெக்டர்களுக்குப் பதிலாக நேரடியாக எல்இடி பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக 15 மீட்டர் அளவிலான சாய்வான எல்இடி டோம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 6,148 எல்இடி பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 42.7 மில்லியன் பிக்சல்கள் மூலம் விண்மீன்கள், கோள்கள் மற்றும் பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளை மிகத் தெளிவாகக் காட்சிப்படுத்த முடியும்.