AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காதலனை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட காதலி.. காரில் கடத்தி கொடூர தாக்குதல்.. 5 பேர் அதிரடி கைது!!

Kerala crime news: கேரள மாநிலம் பாலக்காடு அருகே, தன்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகக் கூறி காதலனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டு, காரில் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிச் சாலையோரத்தில் வீசிய 19 வயது காதலி உட்பட 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காதலனை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட காதலி.. காரில் கடத்தி கொடூர தாக்குதல்.. 5 பேர் அதிரடி கைது!!
காதலி சாபனா, அவரது நண்பர்கள்
Sekaran S
Sekaran S | Published: 13 Nov 2026 11:47 AM IST

கேரளா, நவ.13: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுச் சாலையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி கொண்டூர்கரை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரும், அதே பகுதியின் பெருங்குடி ஊரைச் சேர்ந்த 19 வயதான சாபனா என்ற இளம்பெண்ணும் கடந்த சில காலமாகக் காதலித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில், கடந்த 10ஆம் தேதி சாபனா திரூர் அன்னாரா பகுதியில் வசிக்கும் தனது தோழிகளான நாதியா (20), ரபீபா (25) ஆகியோரைச் சந்திப்பதற்காகச் சென்றுள்ளார். தனது காதலியைத் தேடிக்கொண்டு அன்றைய தினம் இரவே அந்த 19 வயது இளைஞர் தனது நண்பர் ஒருவருடன் திரூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதையும் படிக்க: சூனியம் செய்ததாக இருவர் கொடூர கொலை.. பயத்தில் 2 பேர் தற்கொலை!

ரயில் நிலையத்திற்கு வரவழைத்து தாக்குதல்:

திரூரைச் சென்றடைந்ததும் அந்த இளைஞர் சாபனாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, திரூர் ரயில் நிலையத்திற்கு வந்தால் தான் வந்து அழைத்துச் செல்வதாக சாபனா அவரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சாபனா தனது தோழிகளான நாதியா மற்றும் ரபீபா ஆகியோருடன், தனது கூட்டாளிகளான இர்ஷாத் மற்றும் அசாருதீன் ஆகியோரையும் அழைத்துக்கொண்டு திரூர் ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து தாழேப்பாலம் புறவழிச்சாலை வழியாக அனைவரும் நடந்து சென்ற நிலையில், திடீரென அந்தக் கும்பல் காதலனையும் அவருடன் வந்த நண்பரையும் வலுக்கட்டாயமாக ஒரு காரில் ஏற்றியுள்ளது. பின்னர் ஓடும் காருக்குள் வைத்து இருவரையும் அந்தக் கும்பல் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய காதலனை, அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் சாலையோரத்தில் வீசிவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

காவல்துறையின் விசாரணையும் 5 பேர் கைதும்:

இந்தக் கொடூரத் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட இளைஞருடன் இருந்த நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில், திரூர் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனர். சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடிய போலீசார், காதலி சாபனா, அவரது தோழிகள் நாதியா, ரபீபா மற்றும் கூட்டாளிகள் இர்ஷாத், அசாருதீன் ஆகிய 5 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்தக் கொலை முயற்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ரயில்களில் RAC டிக்கெட் முறை ரத்தாகிறதா? ஒரே படுக்கையை இருவர் பகிரும் முறைக்கு பயணிகள் எதிர்ப்பு – ரயில்வே முக்கிய ஆலோசனை!

காதலியின் வாக்குமூலமும் குற்றப் பின்னணியும்:

கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துப் பேசிய சாபனா, தனது காதலன் தன்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும், தனக்குச் சிறிதளவும் சுதந்திரம் அளிக்காமல் கட்டுப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாகவே தனது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உதவியுடன் அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இர்ஷாத் மற்றும் அசாருதீன் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல், கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow Us