AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரயில்களில் RAC டிக்கெட் முறை ரத்தாகிறதா? ஒரே படுக்கையை இருவர் பகிரும் முறைக்கு பயணிகள் எதிர்ப்பு – ரயில்வே முக்கிய ஆலோசனை!

RAC Ticket: ஆர்ஏசி முறையை முழுமையாக ரத்து செய்வது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஒருவேளை இந்த முறை ரத்து செய்யப்பட்டால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு எவ்வாறு பயண வாய்ப்பு வழங்குவது, ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டுமா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழும்.

ரயில்களில் RAC டிக்கெட் முறை ரத்தாகிறதா? ஒரே படுக்கையை இருவர் பகிரும் முறைக்கு பயணிகள் எதிர்ப்பு – ரயில்வே முக்கிய ஆலோசனை!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Nov 2026 09:10 AM IST

நவம்பர் 13, 2026: இந்திய ரயில்களில் நடைமுறையில் உள்ள ஆர்ஏசி (RAC – Reservation Against Cancellation) டிக்கெட் முறையை ரத்து செய்வது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரே படுக்கையை இரண்டு பயணிகள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருப்பதால், பயணிகளிடையே தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் ஆர்ஏசி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆர்ஏசி டிக்கெட் என்றால் என்ன?

இந்திய ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு மாற்றாக, பயணம் செய்வதற்கான உறுதியை வழங்கும் முறையே ஆர்ஏசி ஆகும். இந்த முறையில் பயணிகளுக்கு பயணம் செய்ய அனுமதி கிடைத்தாலும், தனிப்பட்ட படுக்கை உறுதி செய்யப்படுவதில்லை. பொதுவாக Side Lower Berth-ல் இரண்டு ஆர்ஏசி பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும். இருவரும் முழுமையான டிக்கெட் கட்டணத்தைச் செலுத்தினாலும், உறங்குவதற்கான இடத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

மேலும் படிக்க: “சென்னையில் 12 புதிய ‘மினி தாலுகா’ அலுவலகங்கள்!”.. அதிரடி உத்தரவு பிறப்பித்த முதல்வர் விஜய்!!

பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள்

குறிப்பாக, நீண்ட தூரம் மற்றும் இரவு நேரப் பயணங்களின்போது ஒரே படுக்கையை இருவர் பகிர்ந்து கொள்வது சிரமத்தை ஏற்படுத்துகிறது. யார் எந்த நேரத்தில் படுக்கையைப் பயன்படுத்துவது, அமரும் நேரத்தில் இடத்தை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதில் பயணிகளிடையே வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.

மேலும் படிக்க: “தனி ஒருவனின் கைவரிசையா?”.. மதுரை நகைக்கடை கொள்ளையில் திடீர் திருப்பம்?.. விடிய விடிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை!!

இதனால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பெறும் ஒவ்வொரு பயணிக்கும் தனிப்பட்ட படுக்கை வழங்க வேண்டும் என்றும், ஆர்ஏசி முறையைத் தொடர்ந்தால் அதற்கேற்ப கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வந்தே பாரத் ஸ்லீப்பரில் ஆர்ஏசி கிடையாது!

இதற்கிடையே, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் ஆர்ஏசி மற்றும் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதில்லை. பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட படுக்கைகள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. இதற்கான நடைமுறையை ரயில்வே வாரியம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

ஆர்ஏசி முறை ரத்தாகுமா?

ஆர்ஏசி முறையை முழுமையாக ரத்து செய்வது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஒருவேளை இந்த முறை ரத்து செய்யப்பட்டால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு எவ்வாறு பயண வாய்ப்பு வழங்குவது, ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டுமா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழும்.

எனவே, பயணிகளின் வசதி, டிக்கெட் கட்டணம் மற்றும் ரயில்களில் அதிகரித்து வரும் பயணிகள் தேவையைச் சமநிலைப்படுத்தி ரயில்வே நிர்வாகம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைக்கு ஆர்ஏசி முறை ரத்து செய்யப்படுவது உறுதியான முடிவு அல்ல என்பதால், பயணிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது.

 

Follow Us