மேகதாது அணை விவகாரம்.. டி.கே.சிவக்குமார் கூறுவது நடக்காது.. நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தடாலடி!
Minister N.Anand On Mekedatu Dam : கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுவது நடக்காது என்றும், தமிழக அரசு அதற்கு இடம் அளிக்காது என்றும் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார் .
தமிழகம், கர்நாடகம் இடையே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில், மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தமிழக கிராமப்புற வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலம், மேகதாது பகுதியில் அம் மாநில அரசு அணை கட்டுவதற்கு எந்த சூழ்நிலையிலும் தமிழக அரசு அனுமதி அளிக்காது. கர்நாடக மாநில முதல்வர் டி. கே. சிவகுமார் கூறுவது போல எதுவும் நடக்காது. மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது என்று தெரிவித்தார். இதனிடையே, மேகதாது அணை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதி இருந்தார்.
அணை கட்ட யாரிடமும் அனுமதி கேட்ட வேண்டிய அவசியமில்லை
அதில், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை குறிப்பிட்டிருந்தார். அத்துடன், தமிழக அரசின் அனுமதி இன்றி மேகதாது அணை கட்ட எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி இருந்தார். இதை குறிப்பிட்டு, காவிரியின் அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடக அரசு தனது சொந்த நிலத்தில் அணைக்கட்ட உச்சநீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.
மேலும் படிக்க: தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? எதற்கும் நாங்கள் தயார்.. கே.ஏ.செங்கோட்டையன்!




முதல்வர் விஜய் சட்டத்தை அறிந்திருப்பார் என நம்புகிறேன்
தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று நிபந்தனை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனையை கர்நாடக அரசு கடைபிடிக்கும். தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சட்டத்தை நன்கு அறிந்திருப்பார் என்று நம்புகிறேன். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்துக்கே அதிக பயன் கிடைக்கும். வறட்சி காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கும் நீர்த்தேக்கமாகவும் இந்த திட்டம் செயல்படும்.
இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
இந்த திட்டத்துக்கு கர்நாடக பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வனத்துறை நிலத்துக்கு பதிலாக, தற்போது வேறு 5400 ஹெக்டேர் நிலம் அடையாளம் காணப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, மேகதாது அணை விவகாரத்தில் மோதல் போக்கை கைவிட்டுவிட்டு இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசு மறைக்கிறதா? எம்எல்ஏக்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரம் உள்ளதா.. அண்ணாமலை கேள்வி!