AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல்? வட கடலோர மாவட்டங்களுக்கு மழை இருக்குமா ? வானிலை சொல்லும் தகவல்..

Cyclone in Bay Of Bengal: நவம்பர் 13-ஆம் தேதியான நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 14-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், நவம்பர் 15-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல்? வட கடலோர மாவட்டங்களுக்கு மழை இருக்குமா ? வானிலை சொல்லும் தகவல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Nov 2026 21:33 PM IST

நவம்பர் 12, 2026: வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், அது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாகப் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. தென் தமிழக மாவட்டங்களில் மட்டும் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகி வருகிறது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

இந்தச் சூழலில், நவம்பர் 13-ஆம் தேதியான நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 14-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், நவம்பர் 15-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு.. போலீஸுக்கு தண்ணி காட்டிய தண்டனை கைதி.. மதுரை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோட்டம்!

மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெற்று புயலாக உருவாகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதன் தீவிரம், நகரும் திசை மற்றும் கரையைக் கடக்கும் இடம் உள்ளிட்ட விவரங்களை தற்போதே உறுதியாகக் கணிக்க முடியாது.

தமிழகத்திற்கு மீண்டும் மழை வாய்ப்பு

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் உருவான அர்னாப் மற்றும் முரசு ஆகிய இரண்டு புயல்களும் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் கரையைக் கடந்தன. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பதிவானது.  தற்போது உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்தால், தமிழகத்திற்கு குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: ரூ.1000 கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை.. மாணவர்கள் ஆதார் மூலம் ரூ.70 கோடி கடன் மோசடி.. சேலத்தில் பெண் உள்பட இருவருக்கு காப்பு!

ஏற்கெனவே தென் தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், அடுத்தடுத்த நாட்களில் வடகடலோர மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கக்கூடும். இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி எந்தத் திசையில் நகர்கிறது, எவ்வளவு வலுப்பெறுகிறது என்பதைப் பொறுத்தே தமிழகத்தில் மழையின் தீவிரம் மற்றும் பரவல் குறித்து தெளிவான கணிப்புகள் வெளியாகும்.

Follow Us