AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Keerthy Suresh: அவர காப்பாத்தாம இங்க இருந்து வராதா இல்ல… கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் சத்யவான் சாவித்ரி திரைப்படத்தின் ட்ரெய்லர்!

Sathyavan Savithiri Movie Trailer: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்துவருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய படம்தான் சத்யவான் சாவித்ரி.. இதில் மிஷ்கின் இணைந்து முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக தயாராகிவரும் நிலையில், தற்போது இதன் ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது.

Keerthy Suresh: அவர காப்பாத்தாம இங்க இருந்து வராதா இல்ல… கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் சத்யவான் சாவித்ரி திரைப்படத்தின் ட்ரெய்லர்!
சத்திவான் சாவித்திரி படத்தின் ட்ரெய்லர்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 12 Nov 2026 21:10 PM IST

மலையாள திரையுலகின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). என்னதான் இவருக்கு மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகத்தை கொடுத்திருந்தாலும், மக்கள் மத்தியில் கதாநாயகி என்ற அங்கீகாரம் கொடுத்தது தமிழ் சினிமாதான். இவர் தமிழில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுக்கு படங்களில் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார். மேலும் இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்கள் அதிகம். தெலுங்கிலும் மகேஷ் பாபு முதல் நானி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இவர் கதாநாயகியாக லீடாக கொண்டு உருவாக்கப்படும் படங்களில் நாயகியாக பணியாற்ற ஆர்வம் காட்டிவருகிறார்.

இப்படத்தை இயக்குநர் பிரவீன் எஸ் விஜயாய் (Director Praveen Vijaay) இயக்கத்தில், நடித்துவந்த படம்தான் சத்யவான் சாவித்ரி (Sathyavan Savithiri Movie). இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் (Mysskin) இருவருமே இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது கோர்ட் ரூம் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்திலிருந்து ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜூனியர் பிக் பாஸை மாற்ற நினைத்த தன்யா.. அன்சருக்கு ஆதரவாக எழுந்த ஜேசன் – எமோஷனலான ப்ரோமோ!

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் சத்யவான் சாவித்ரி பட ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த ட்ரெய்லரில், கீர்த்தி சுரேஷ், நடிகர் சாருகேஷை பிடிக்காமல் திருமணம் செய்துகொள்கிறார். அவர் ஏற்கனவே வழக்கறிஞராக பணியாற்றியும் வருகிறார். சாருகேஷின் கதாபாத்திரம் கொலை செய்துள்ளதாக அவர் கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்ட தனது கணவர் குற்றவாளியா? அல்லது நிரபராதியா என கண்டறிய கீர்த்தி சுரேஷ் துடிக்கிறார். தனது கணவருக்காக கீர்த்தி சுரேஷ் கோர்ட்டில் வாதாட படும் கஷ்டம் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் இந்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இது கீர்த்தி சுரேஷுக்கு வெற்றியையே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்யவான் சாவித்ரி படத்தின் ட்ரெய்லர் பதிவு:

இந்த சத்யவான் சாவித்ரி திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், இளம் லாயராக நடித்துள்ளார். மேலும் மூத்த வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போட்டி மற்றும்விளக்கு குறித்தே இப்படம் நகருமம. இதில் ஹார்ட் பீட் சீரிஸ் புகழ் சாருகேஸ், கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பாலா சரவணன், ஷில்பா, பிரிகிடா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: நிறைவே… ஆர்யா – வைஷ்ணவியின் ஹலோ காதல் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம். சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பாக வந்துள்ளது. இந்த திரைப்படம் வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அதை முன்னிட்டு தற்போது ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us