AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தல-யின் தீபாவளி.. அஜித் குமார் – ஷாலினி அஜித் குமாரின் தீபாவளி கிளிக்!

Shalini Ajith Instagram: தென்னிந்திய சினிமாவில் லீட் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் அஜித் குமார். இவரின் நடிப்பில் தமிழில் டேர் டெவில் என்ற திரைப்படமானது சிறப்பாக உருவாகிறது. 2026ம் தீபாவளியை தனது கணவர் அஜித் குமாருடன் கொண்டாடியது குறித்த புகைப்படத்தை அஜித் குமார் பகிர்ந்துள்ளார்.

தல-யின் தீபாவளி.. அஜித் குமார் – ஷாலினி அஜித் குமாரின் தீபாவளி கிளிக்!
அஜித் மற்றும் ஷாலினிImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 12 Nov 2026 21:41 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்துள்ளார். இறுதியாக இவரின் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichnadran) இயக்கியிருந்த நிலையில், அஜித் குமாருக்கு ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலை கொடுத்த முதல் படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் அஜித் மற்றும் திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் கூட்டணியில் டேர் டெவில் (Dare Devil) என்ற திரைப்படம் தற்போது உருவாகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த படமானது அதிரடி கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறதாம்.

இந்நிலையில் அஜித் மற்றும் ஷாலினி அஜித் (Shalini Ajithkumar) இருவருமே இணைந்து 2026ம் ஆண்டு தீபாவளி கொண்டாடியுள்ளனர். இது குறித்த இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை ஷாலினி அஜித் குமார் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு… நாளை வெளியாகிறது தனுஷின் ஓம் படத்தின் ட்ரெய்லர் – வெளியானது அப்டேட்!

அஜித் மற்றும் ஷாலினி அஜித் குமாரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

இந்த புகைப்படத்தில் அஜித் மற்றும் ஷாலினி அஜித் குமார் இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. 2026ம் ஆண்டு தீபாவளியை இவர்கள் இருவருமே இணைந்து கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங்:

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் குமார் இருவருமே மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் டேர் டெவில். இந்த படத்தை அஜித் குமார் மற்றும் ஷாலினி அஜித் குமார் இருவருமே இணைந்து தயாரித்துவருகிறார்கள். இந்த படத்தில் அஜித் குமார், ஸ்ரீலீலா, சுனில், பிரபு, உன்னி முகுந்தன் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: இறுதிக்கட்டத்தில் மெண்டல் மனதில் படத்தின் ஷூட்டிங்… ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு

இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சிறப்பாக தொடங்கிய நிலையில், இன்று முழுவதுமாக தொடங்கியுள்ளது. இந்த படத்திற்க்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், சிறப்பாக உருவாக்கப்பட்டுவருகிறது. இந்த படமானது அதிரடி மற்றும் பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக்கப்படுகிறது. இந்த படமானது 2027ம் ஆண்டு இறுதியில் இப்படமானது வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us