AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Hello Kadhal: நிறைவே… ஆர்யா – வைஷ்ணவியின் ஹலோ காதல் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!

Niraive Song: தமிழில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆர்யா. இவரின் நடிப்பிலும், மலையாள இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ஹலோ காதல். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், நிறைவே என்ற செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

Hello Kadhal: நிறைவே… ஆர்யா – வைஷ்ணவியின் ஹலோ காதல் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!
நிறைவே பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Nov 2026 18:08 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்கவும், தயாரிப்பாளராகவும் இருந்துவருபவர் ஆர்யா (Actor Arya). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் அனந்தன் காடு (Ananthan Kaadu Movie). இந்த படமானது கடந்த ஜூன் மாதத்தில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகை ரெஜினா, நிகிலா விமல் உள்ளதா பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது இவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு மலையாள இயக்குநர் நிகில் முரளி (Director Nikhil Muraly) இயக்கத்தில், ஆர்யா நடித்துவந்த திரைப்படம்தான் ஹலோ காதல் (Hello Kadhal Movie). இப்படமானது ஆர்யாவின் 40வது திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருந்து.

இப்படத்தை நடிகர் ஆர்யா, தனது தி ஷோ பீப்புள் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்யாவின் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கவே முதல் சிங்கிள் வெளியாகியிருந்தது. தற்போது இப்படத்திலிருந்து “நிறைவே” (Niraive Song) என்ற செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஜூனியர் பிக் பாஸை மாற்ற நினைத்த தன்யா.. அன்சருக்கு ஆதரவாக எழுந்த ஜேசன் – எமோஷனலான ப்ரோமோ!

ஆர்யாவின் ஹலோ காதல் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து எக்ஸ் பதிவு:

ஆர்யாவின் ஹலோ காதல் படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த ஹலோ காதல் திரைப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இரு நடிகைகள் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகை வைஷ்ணவி சைதன்யா மற்றும் மலையாள நடிகை நிகிலா விமல் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஒரு வித்தியாசமான காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இயக்குநர் நிகில் முரளி இயக்கியுள்ள அந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: ஓ பெண்ணே பெண்ணே… அனிருத் – காவியா மாறனின் கிரீஸ் திருமண போட்டோ கிளிக்ஸ்!

இந்த படத்தின் பணிகள் போஸ்ட் ப்ரொடக்ஷனில் உள்ள நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இந்த படத்தில் ஆர்யா இரு பெண்களை காதலிக்கும் நபராக நடித்துள்ளார். இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இந்த படமானது சிறப்பான காதல் கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் நிலையில், நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us