AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Hello Kadhal: கண்ணும் கண்ணும்… ஆர்யாவின் ஹலோ காதல் படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள்!

Hello Kadhal Movie First Single: தென்னிந்திய திரைத்துறையில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆர்யா. இவரின் நடிப்பில் வித்தியாசமான காதல் கதையில் உருவாகிவரும் புதிய பபாம் ஹலோ காதல். இப்படத்திலிருந்து 'கண்ணும் கண்ணும்' என்ற முதல் சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

Hello Kadhal: கண்ணும் கண்ணும்… ஆர்யாவின் ஹலோ காதல் படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள்!
கண்ணும் கண்ணும் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Oct 2026 12:26 PM IST

கோலிவுட் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளை செய்துவருபவர் நடிகர் ஆர்யா (Actor Arya). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அனந்தன் காடு (Anandhan Kaadu). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இறுதியில் வெளியான நிலையில், ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது தமிழகம் மற்றும் கேரளம் எல்லைக்குள் நடக்கும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு பின் ஆர்யா தமிழில் புதிய படங்களில் ஒப்பந்தமாகிவந்தார். அதில் மலையாள இயக்குநர் நிகில் முரளியின் (Nikhil Muraly) இயக்கத்தில் நடித்துவந்த புதிய படம்தான் ஹலோ காதல் (Hello Kadhal Movie). இந்த படமானது ஆர்யா40 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் டைட்டில் டீசர் வெளியானது.

இந்நிலையில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு டிசம்பரில் வெளியாக தயாராகிவரும் நிலையில், இப்படத்திலிருந்து “கண்ணும் கண்ணும்” (Kannum Kannum Song) என்ற முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலானது தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: அப்பாவ போல… விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

ஹலோ காதல் படத்தின் முதல் சிங்கிள் குறித்து நடிகர் ஆர்யா பகிர்ந்த எக்ஸ் பதிவு:

இந்த ஹலோ காதல் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்தின் முதல் சிங்கிளான “கண்ணும் கண்ணும்” வெளியாகியுள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பாடகர் கபில் கபிலன் மற்றும் பாடகி சிவாங்கி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலானது தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

ஆர்யாவின் ஹலோ காதல் படத்தின் ரிலீஸ்:

இந்த ஹலோ காதல் திரைப்படத்தில் ஆர்யா ஹீரோவாக மற்றும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இரு நடிகைகள் நடித்துள்ளனர். நடிகை நிகிலா விமல் மற்றும் தெலுங்கு நடிகை வைஷ்ணவி சைதன்யா இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: முடிஞ்சத பாத்துக்கோ.. பிக் பாஸில் ப்ளூ டீமின் உணவை கண்முன்னே எடுத்த முனியம்மாள் – வைரலாகும் ப்ரோமோ!

மேலும் இப்படத்தில் நடிகர் கிஷோரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படமானது வித்தியாசமான காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us