AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Arya40: ஒரே ஆணை காதலிக்கும் இரு பெண்கள்.. ஆர்யாவின் 40வது பட டைட்டில் வெளியீடு!

Aryas 40th Film Title: தமிழ் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டுவரும் நடிகராக இருந்துவருபவர் ஆர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக அனந்தன் காடு என்ற படம் வெளியானது. இந்த படத்திற்கு பின் இவரின் நடிப்பில் ஆர்யா40 என்ற படம் உருவாகிவந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் பதிவு வெளியாகியுள்ளது.

Arya40: ஒரே ஆணை காதலிக்கும் இரு பெண்கள்.. ஆர்யாவின் 40வது பட டைட்டில் வெளியீடு!
ஆர்யாவின் 40வது திரைப்படத்தின் தலைப்புImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Oct 2026 17:35 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆர்யா (Arya). இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய படங்களில் பணியாற்றிவரும் நிலையில், மலையாளம் சினிமாவிலும் தற்போது நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம்தான் அனந்தன் காடு (Ananthan Kaadu). மலையாளம் மொழியை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்த இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களையே கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித்தின் (Pa. Ranjith) இயக்கத்தில் வேட்டுவம் (Vettuvam) படத்திலும், மலையாள இயக்குநர் இயக்கத்தில் ஆர்யா40 (Arya40) போன்ற படங்களிலும் நடித்துவந்தார். அந்த வகையில் இந்த ஆர்யா40 படத்தை மலையாள இயக்குநர் நிகில் முரளி (Nikhil Muraly) இயக்கும் நிலையில், இரு நடிகைகள் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், இறுதிக்கட்டத்தில் உள்ளது. அந்த விதத்தில் இன்று (12/10/2026) இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: வட சென்னை 2 படம் எப்போது தொடங்கும்? இயக்குநர் வெற்றிமாறன் ஓபன் டாக்!

நடிகர் ஆர்யாவின் 40வது படத்தின் டைட்டில் என்ன:

மலையாள இயக்குனர் நிகில் முரளி இயக்கத்தில் ஆர்யா நடித்துவந்த 40வது படத்திற்கு ஹலோ காதல் என படக்குழு டைட்டில் வைத்துள்ளது. இது தொடர்பான டைட்டில் டீசரை பாடக்குழு பகிர்ந்துள்ளது. இந்த டீசரை ஆர்யா, நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி மூவருமே இடம்பெற்றுள்ளனர் இந்த இரு நடிகைகளும் ஆர்யாவை காதலுக்கும் வகையில் இந்த டீசரில் காட்டப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தை 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஆர்யாவின் 40வது படத்தின் டைட்டில் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இரு நடிகைகள் நடிக்கிறார்கள். மலையாள நடிகை நிகிலா விமல் மற்றும் தெலுங்கு நடிகை வைஷ்ணவி சைதன்யா இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை மலையாள இயக்குநர் நிகில் முரளி இயக்க, மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது ரோமெண்டிக் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். அந்த விதத்தில் இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவருகிறார்.

இதையும் படிங்க: வாழ்க்கையிலும் அதை ஒன்ஸ் மோர் னு எடுத்துக்கோங்க.. ரசிகர்களுக்கு சூர்யா கொடுத்த அட்வைஸ்!

இவரின் இசையில் இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ள நிலையில், இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் மீது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது.

Follow Us