வட சென்னை 2 படம் எப்போது தொடங்கும்? இயக்குநர் வெற்றிமாறன் ஓபன் டாக்!
Vada Chennai 2 Movie Update | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றி மாறன். இவர் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய போது வட சென்னை 2 படம் எப்போது தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த சமூகத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்கு நடைபெறும் அவலத்தை மிகவும் வெளிப்படையாக தனது படங்களில் பேசி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் விடுதலை பாகம் இரண்டு படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து இரண்டு படங்களை தற்போது ஒரே நேரத்தில் எழுதி இயக்கி வருகிறார். அதன்படி நடிகர் சிலம்பரசனை வைத்து அரசன் என்ற படத்தையும் நடிகர் கென் கருணாஸை வைத்து ராஜன் வகையரா என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
மேலும் இயக்குநர் வெற்றிமாறன் தற்போது இந்த இரண்டு படங்களை இயக்குவதில் பிசியாக இருந்து வரும் நிலையில் அவர் எந்த பேட்டி அளித்தாலும் ஏதேனும் சினிமா விழாக்களில் கலந்துகொண்டாலும் அவரிடம் கேட்கப்படும் ஒரே கேள்வி வட சென்னை 2 படம் எப்போது வெளியாகும் என்பது தான். நடிகர் தனுஷ் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது வட சென்னை. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமீபத்தில் வெற்றிமாறன் விழா ஒன்றில் பேசியுள்ளார்.




வட சென்னை 2 படம் எப்போது தொடங்கும்? வெற்றிமாறன் ஓபன் டாக்:
அதன்படி வெற்றிமாறன் அந்த விழாவில் பேசியதாவது, அரசன் மற்றும் ராஜன் வகையறா படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களும் முடிந்தவுடன், வட சென்னை 2 படத்தின் பணிகளைத் தொடங்குவோம் என்று தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிக் பாஸில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பெற்ற ஜேசன்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Question: The wait for VadaChennai2 continues! We’re now talking about the Cinematic Universe, with projects like Arasan, RajanVagaiyara, and #VadaChennai. Could you share some updates about these projects?
#VetriMaaran: The shooting of #Arasan and #RajanVagaiyara is currently underway. Once these two films are completed, we will begin work on #VadaChennai2.
VCU (VetriMaaran Cinematic Universe) loading! 🔥
https://t.co/GWt3f0qKzM— Movie Tamil (@_MovieTamil) October 11, 2026
Also Read… Ranabaali: விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ‘தீரம் தீரம்’ பாடல் வெளியீடு!