AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக் பாஸில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பெற்ற ஜேசன்!

Bigg Boss Eviction Free Pass: தமிழில் மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் சீசன் 10 ஒளிபரப்பப்பட்டுவரும் நிலையில், இதன் மீது நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த விதத்தில் 5வது வாரத்தின் இறுதியில் இருக்கும் நிலையில், இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ஃப்ரீ பாஸை ஜேசன் பெற்றுள்ள தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ஃப்ரீ பாஸை பெற்ற ஜேசன்!
ஜேசன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 11 Oct 2026 19:16 PM IST

விஜய் டிவியில் (Vijay Tv) மக்கள் கொண்டாடும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் (Bigg Boss). தற்போது இந்த நிகழ்ச்சியின் சீசன் 10 ஆண்டு தமிழில் சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இதை தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், மக்களிடையே இதற்கான வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது 2026 ஆண்டு செப்டம்பர் ஆரம்பத்தில் தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதுவரையில் இந்த நிகழ்த்தியானது 5 வாரங்களை கடந்துள்ள நிலையில், 6வது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அந்த வைகையில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் உள்ளார்கள்.

அந்த விதத்தில் வார வாரமாக ஒரு நபருக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் (Eviction Free Pass) கொடுக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த வாரத்தில் ஷமா அதை பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ஃப்ரீ பாஸை யார் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ராம யுகத்தின் ஆரம்பம்… ரன்பீர் – சாய் பல்லவியின் ராமாயணா பார்ட் : 1 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ஃப்ரீ பாஸை வெற்ற ஜேசன்:

இந்த நிகழ்த்தியானது ஆரம்பமாக இன்றுடன் (11/10/2026) கிட்டத்தட்ட 35 நாட்களான நிலையில், மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் வரவர்க்கப்படும் நிலையில், அதே அளவுக்கு விமர்சனங்களையும் பெறுகிறது. வாரம்தோறும் ஒரு நபருக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் என மொத்தம் 4 வாரங்கள் கொடுக்கப்படவுள்ள நிலையில், 2வது எவிக்ஷன் ஃப்ரீ பாஸை ஜேசன் பெற்றுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பிக் பாஸில் லக்ஷ்மி பிரியா – ஷமாவுக்கும் நடந்த டீல்.. குறும்படம் போட்ட விஜய் சேதுபதி!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 35வது நாளின் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு :

தற்போது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தேவைரமாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரத்தில் பெரிதாக எந்த எவிக்ஷனும் இல்லாத நிலையில், அடுத்த வாரத்தில் 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியானது மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் டைட்டில் என்பதை கணிக்கவே முடியவில்லை என கூறலாம்.

Follow Us