பிக்பாஸில் லட்டர் டாஸ்க் குறித்து பேசிய விஜய் சேதுபதி… எமோஷ்னலான போட்டியாளர்கள்!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த 5-வது வாரம் முழுவதும் நடைப்பெற்ற விசயங்கள் குறித்து விஜய் சேதுபதி நேற்று மற்றும் இன்றைய எபிசோடில் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில் இன்று லட்டர் டாஸ்க் குறித்து பேசியுள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 19 போட்டியாளர்கள் உள்ளே சென்றனர். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 5 போட்டியாளர்கள் வைல்கார்ட் என்ரியாக உள்ளே நுழைந்தனர். அதன்படி இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரமே உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் பளாக் பாண்டி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மணிவண்ணன், ஆனந்தி, குமரன், ஜாவித் மற்றும் சாவன்யா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். தொடர்ந்து விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சி 5-வது வாரத்தின் இறுதியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 5-வது வாரம் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து போட்டியாளர்களிடையே அதிக அளவில் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கு நடுவில் பிக்பாஸ் லட்டர் டாஸ்க் ஒன்றை வழங்கி சக போட்டியாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸில் லட்டர் டாஸ்க் குறித்து பேசிய விஜய் சேதுபதி:
அதன்படி லட்டர் டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளருக்கு கடிதம் எழுதினர். இதில் கடிதம் பெற்றவர்களிடம் இன்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி கடிதம் கிடைக்கப் பெறாதவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்தும் கேட்கிறார். அப்போது லக்ஷ்மி பிரியா மிகவும் எமோஷ்னலாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… Rajinikanth: ஜெயிலர் 2 படத்தில் அனிருத்துக்குத்தான் பெரும் மன அழுத்தம் – ரஜினிகாந்த் பேச்சு!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day35 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/LyBYZQRPR7
— Vijay Television (@vijaytelevision) October 11, 2026
Also Read… பாக்கெட் நாவெல் படத்தின் ஷூட்டிங் முடிந்தது… விஜய் சேதுபதி வெளியிட்ட பதிவு