AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கமல்ஹாசனின் இந்தியன் 3 பட கதை இப்படியா இருக்கும் – இணையத்தில் வைரலாகும் தகவல்!

Kamal Haasans Indian 3 Movie Story: உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படம்தான் இந்தியன் 3. இந்த படமானது உருவாகுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் கதை எவ்வாறு இருக்கும் என இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

கமல்ஹாசனின் இந்தியன் 3 பட கதை இப்படியா இருக்கும் – இணையத்தில் வைரலாகும் தகவல்!
இந்தியன் 3 திரைப்படக் கதைImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Oct 2026 17:11 PM IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் உலகநாயகன் கமல்ஹாசன் (KamalHaasan). இவர் சினிமாவில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவரின் நடிப்பில் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). கடந்த 2025ம் ஆண்டில் ஜூன் மாதத்தில் இந்த படமானது வெளியாகியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதை இயக்குநர் மணிரத்தினம் (Mani Ratnam) இயக்கியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதற்க்கு பின் இயக்குநர் எஸ்.யு அருண்குமாரின் (SU Arun Kumar) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். அந்த விதத்தில் இயக்குநர் ஷங்கர் (Shankar) இயக்கத்தில், கமல்ஹாசன் இந்தியன் 3 (Indian 3) படத்தில் பணியாற்றவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவிவந்த நிலையில், தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கின்போதே இந்தியன் 3 படத்திற்கான பணிகள் பாதியளவில் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் தற்போது இந்தியன் 3 படமானது முழுக்க எவ்வாறு இருக்கும் என வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜ்: நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த்

கமல்ஹாசனின் இந்தியன் 3 படத்தின் கதை எவ்வாறு இருக்கும்:

இந்தியன் 3 ஒரு முன்கதை என்றும், இதில் சேனாபதி மீண்டும் நடிக்க வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்தியன் 2-ல் நடித்த சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானிசங்கர் ஆகியோரின் கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் இடம்பெறுவார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: முனியம்மாளின் வாழ்க்கை அனுபவம்.. நகைச்சுவையாக இருக்கும் பிக் பாஸ் புரோமோ!

மேலும் இந்தியன் 3 படத்தில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் இருவரின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டும், ஒரு முழுமையான சரித்திர கதையாக உருவாக்கப்பட்டுவக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படம் எவ்வாறு இருக்கும் என் ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துவருகிறது.

இந்தியன் 3 திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் இந்தியன் 2. இபோடமானது கடந்த 2024ம் ஆண்டில் வெளியான நிலையில், மாபெரும் தோல்வி படமாக அமைந்திருந்தது. இந்த படம் ஷூட்டிங்கின்போதே இந்தியன் 3 படத்திற்கான பாசி ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாம். அதனால் இந்திய 3 படத்தை படக்குழு வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் வெளியிட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us