ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜ்: நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த்
Rajinikanth Congratulates Vithya Ramraj : ஜப்பானில் நடந்து முடிந்த 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்ற தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை, நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்துக்கு நேரில் வரவழைத்துப் பாராட்டியுள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 8 : ஜப்பானில் நடந்து முடிந்த 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்ற தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை, நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்துக்கு நேரில் வரவழைத்துப் பாராட்டியுள்ளார். கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், ஜப்பானில் சமீபத்தில் நடந்துமுடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டபந்தயத்தில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.
தங்கம் வென்ற வித்யா ராம்ராஜை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த்
இறுதிச் சுற்றில் கடைசிப் பகுதியை ஓடிய அவர், அபாரமான வேகத்தில் இலக்கை அடைந்து இந்தியாவுக்குத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். இதற்கு முன்னதாக, கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து, மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 வினாடிகளில் ஓடி வெண்கலம் வென்றதோடு, 42 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த பி.டி. உஷாவின் தேசிய சாதனையையும் முறியடித்தார்.இதனையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.




இதையும் படிக்க : Team India: புவியின் வருகை! இந்திய அணியில் மீண்டும் முகமது ஷமி இடம்பிடிப்பாரா?
ஒரே தொடரில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களுடன் தேசிய சாதனையும் படைத்தது, அவரது விளையாட்டு வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.போட்டிகளை முடித்துக்கொண்டு, கடந்த அக்டோபர் 3, 2026 அன்று வித்யா தனது சொந்த ஊரான கோவைக்குத் திரும்பினார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த்துடன் வித்யா ராம்ராஜ்
View this post on Instagram
இந்த நிலையில் முதல்வர் விஜய் அவருக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், தங்கப் பதக்கம் வென்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். அவரது மகத்தான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு வித்யா ராம்ராஜை வரவழைத்த நடிகர் ரஜினிகாந்த், அவரது சாதனையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக அவரை நடிகர் தனுஷும் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : Team India: தேர்வு கூட்டங்களில் VVS லட்சுமண் கலந்து கொண்டது ஏன்..? பிசிசிஐ விளக்கம்!
மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் வித்யா ராம்ராஜுக்கு ஊக்கத்தொகை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் அக்டோபர் 8, 2026 இன்று ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் குவித்த வீரர்களுக்கு முதல்வர் விஜய் தலைமையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. அதில் வித்யாவும் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.