Team India: புவியின் வருகை! இந்திய அணியில் மீண்டும் முகமது ஷமி இடம்பிடிப்பாரா?
Mohammed Shami's Comeback: புவனேஷ்வர் குமாரின் வருகையால், முகமது ஷமியின் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய ஷமி, ரஞ்சி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி கோப்பைகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். பெங்கால் பயிற்சியாளர் சுக்லா, ஷமியால் மீண்டும் வலுவாக மீண்டு வர முடியும் என நம்புகிறார். ஷமி இந்திய அணிக்குத் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்திய அணியின் (Indian Cricket Team) அனுபவ பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar) 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், முகமது ஷமி மீண்டும் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்திய அணிக்காக விளையாடுவதற்கான திறனும் உத்வேகமும் முகமது ஷமியிடம் இன்னும் இருப்பதாக பெங்கால் அணியின் பயிற்சியாளர் லட்சுமி ரத்தன் சுக்லா நம்புகிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டுள்ள முகமது ஷமிக்கு, இப்போது இந்திய அணிக்குள் வருவதற்கான பாதை திறக்குமா என்பதை அனைவரின் பார்வையும் நோக்கியுள்ளது.
ALSO READ: 4 ஆண்டுகளுக்குப் பிறகு! இந்திய அணிக்குள் புவனேஷ்வர்.. எதிர்பார்ப்பில் NZ தொடர்!
புவி வருகையால் ஷமி மீது எதிர்பார்ப்பு:
புவனேஷ்வர் குமாரின் வருகை முகமது ஷமி மீதான நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. புவனேஷ்வர் குமார், கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்க்குப் பிறகு முதல் முறையாக இந்திய அணியில் இடம்பிடித்து, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புவிக்குப் பிறகு ஷமி மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில், இந்திய அணிக்காக விளையாடும் ஆர்வம் ஷமியிடம் இன்னும் இருப்பதாகவும், அவரால் வலுவாக மீண்டு வர முடியும் என்றும் வங்காள அணியின் பயிற்சியாளர் லட்சுமி ரத்தன் சுக்லா நம்புகிறார்.




உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தும் முகமது ஷமி:
உள்ளூர் கிரிக்கெட்டில் முகமது ஷமியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்துள்ளது. 2025-26 ரஞ்சி கோப்பையில், ஷமி வெறும் 7 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தி, பெங்கால் அணியை அரையிறுதிக்கு அழைத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்றினார்.
ரஞ்சி டிராபியை தொடர்ந்து மற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் ஷமியின் மீள்வருகை செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. அதன்படி, முகமது ஷமி விஜய் ஹசாரே கோப்பையில் 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும், சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 7 போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
முகமது ஷமியின் ஐபிஎல் ஆட்டமும் சவாலாகவே இருந்துள்ளது. 2026 ஐபிஎல் தொடரில், அவர் 13 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஓவருக்கு 9 ரன்கள் என்ற அளவில் மட்டுமே ரன்களைக் கொடுத்தார்.
ஷமியின் அனுபவம் அணிக்கு இன்னமும் பயனுள்ளதாக இருக்கும். முன்னாள் இந்திய வீரர் ஹனுமா விஹாரி உள்ளிட்ட சில கிரிக்கெட் வல்லுநர்கள், 2027 ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, அனுபவமிக்க பந்துவீச்சாளர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ALSO READ: ஐசிசி ஒருநாள் தரவரிசை! கில் முதலிடம், KL ராகுல் டாப் 10க்குள் முன்னேற்றம்!
ஐபிஎல்லில் சிறப்பான பந்துவீச்சு:
புவனேஷ்வர் குமார் மீண்டும் அணிக்குத் திரும்பியதற்கான முக்கிய காரணம் அவரது ஐபிஎல் செயல்பாடுதான். புவி 2025 மற்றும் 2026 ஐபிஎல் சீசன்களில் ஆர்சிபி அணிக்காக மொத்தம் 45 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் கடந்த ஐபிஎல் 2026-ல் மட்டும் 28 விக்கெட்டுகளும் அடங்கும்.